twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 பேர் சேர்ந்தும் சந்தானம் இடத்தை நிரப்ப முடியலையே.. சிக்கி சின்னாபின்னமாகும் ‘மிஸ்டர்.லோக்கல்’!

    மிஸ்டர் லோக்கல் படத்தில் சந்தானம் நடிக்காதது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    |

    சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்தில் சந்தானம் இல்லாததால் காமெடி சரியாக எடுபடவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் கடவுள் இருக்கான் குமாரு படம் மற்றும் மிஸ்டர் லோக்கல் தவிர மற்ற படங்கள் அனைத்திலும் சந்தானம் நடித்திருந்தார். ராஜேஷ் - சந்தானம் காமெடி கூட்டணிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

    Mr.Local: None is replacing Santhanam

    இந்நிலையில், தற்போது ரிலீசாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் சந்தானத்தின் இடத்தை நிரப்புவதற்காக சிவகார்த்திக்கேயனுடன் சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு மற்றும் தம்பி ராமையா என நான்கு முன்னணி காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனாலும் படத்தில் சந்தானம் இல்லாதது பெரிய குறையாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    சந்தானத்தின் இடத்தை இவர்களால் நிரப்ப முடியவில்லை என்பதே அவர்களது கருத்து. இதனால் அடுத்த படத்தில் மீண்டும் எப்படியாவது சந்தானத்தை நடிக்க வைக்க வேண்டும் என ராஜேஷுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நின்னு கோரி வர்ணம்.. சில்ற இல்லபா.. இவங்களே கலாய்ச்சுக்கிட்டா அப்புறம் நாம எதுக்கு? நின்னு கோரி வர்ணம்.. சில்ற இல்லபா.. இவங்களே கலாய்ச்சுக்கிட்டா அப்புறம் நாம எதுக்கு?

    காமெடிக்கு பேர் போன சிவகார்த்திக்கேயன் நாயகனாக இருந்தும், படத்தில் நான்கு முன்னணி காமெடி நடிகர்கள் இருந்தும் படத்தில் காமெடி ரசிக்கும்படி இல்லை என்பதே படத்தைப் பார்த்த பலரது விமர்சனமாக உள்ளது.

    English summary
    Even though there is four comedians in Sivakartikeyan's Mr.Local, they were not able to match Santhanam - Rajesh combo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X