மிஸ்டர் லோக்கல் ட்ரெய்லர்: உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கல சிவகார்த்திகேயன்
சென்னை: மிஸ்டர் லோக்கல் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனை எல்லாருக்கும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளை சொல்லவும்.
சிவகார்த்திகேயன்
ட்ரெய்லரில் நயன்தாரா அழகியாகவும், ராங்கியாகவும் வருகிறார். சிவகார்த்திகேயன் என்னவென்றால் நயன்தாராவையே கலாய்க்கிறார். நீங்க வேற லெவல் ஹீரோ பாஸ். ராதிகாவோ சிவகார்த்திகேயனை அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும் என்கிறார்.

விஜய்
குட்டீஸ்களுக்கு ரஜினிகாந்த், விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் சேர்ந்துள்ளார். குட்டீஸ்களை சிவகார்த்திகேயன் தன் பக்கம் ஈர்த்துவிட்டதை விஜய்யே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். அதனால் ராதிகாவின் வசனத்தில் உண்மை உள்ளது.

நயன்தாரா
மிஸ்டர் லோக்கல் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளதாலோ என்னவோ ட்ரெய்லர் திருப்தி அளிப்பதாக இல்லை. அதிலும் குறிப்பாக நயன்தாராவின் குரல் மோசமாக உள்ளது. அவரின் கெத்தே போய் சப்பையாகிவிட்டது.

சுவாரஸ்யம்
விஸ்வாசம் படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கலிலும் ரோபோ ஷங்கர் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறளை மாற்றி இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண அன்னைக்கே வச்சு செய்துவிடல் இது இந்த மனோகர் சொல்றது என்று குறளையே மாற்றிவிட்டார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











