twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. ‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடலை பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் காலமானார்!

    |

    திருவனந்தபுரம்: தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் 200க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் இன்று காலமானார். அவருக்கு வயது 46.

    ஏ.ஆர். ரஹ்மானின் ஃபேவரைட்டான பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் சங்கீதா சஜித்.

    மிஸ்டர் ரோமியோ படத்தில் இவர் பாடிய 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை" பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    கேஜிஎஃப் நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... சோகத்தில் திரையுலகினர் கேஜிஎஃப் நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... சோகத்தில் திரையுலகினர்

    சங்கீதா சஜித் காலமானார்

    சங்கீதா சஜித் காலமானார்

    கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் இன்று காலமானார். அவருக்கு வயது 46. உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தின் தைகாடு எனும் இடத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டில் இருந்து சிகிச்சைப் பெற்று வந்த சங்கீதா சஜித் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவு தென்னிந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சங்கீதா சஜித் சிகிச்சைப் பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை திருவனந்தபுரத்தின் தைகாடு எனும் இடத்தில் உள்ள சாந்தி கவடம் எனும் இடத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. மலையாள திரைபிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தண்ணீரை காதலிக்கும்

    தண்ணீரை காதலிக்கும்

    இயக்குநர் கே.எஸ். ரவி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான மிஸ்டர் ரோமியோ படத்தில் இடம்பெற்ற 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை.. தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை' என்கிற சூப்பர் ஹிட் பாடலை பாடகி சங்கீதா சஜித். இவ்வளவு குறைவான வயதில் அவர் பிரிந்தது இசையுலகத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி உள்ளது.

    பிருத்விராஜ் படம்

    பிருத்விராஜ் படம்

    தமிழில் மிஸ்டர் ரோமியோ, தலைநகரம் என வெகு சில படங்களிலேயே பாடியுள்ள சங்கீதா சஜித் மலையாள திரையுலகில் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர் பிருத்விராஜின் அய்யப்பனும் கோஷியும் படத்தின் தாளம் போயி தப்பும் போயி பாடலை பாடியிருந்தார். பிருத்விராஜின் குருதி படத்தின் தீம் சாங் தான் அவர் பாடிய கடைசி பாடல்.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித் 46 வயதிலேயே சிறுநீரக பிரச்சனை காரணமாக உயிரிழந்த செய்தியை கேட்டு பல பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சங்கீதா சஜித் பாடிய பாடல்களை ஷேர் செய்து ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Mr. Romeo fame playback singer Sangeetha Sajith died as a result of kidney problems.She sang the super hit song Thaneerai Kadhalikum Meengala illai to AR Rahman's music.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X