»   »  வெங்கட் பிரபு சார்… ஒரு நிமிஷம்!

வெங்கட் பிரபு சார்… ஒரு நிமிஷம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுமார் ரெண்டு வருடங்களுக்கு முன்பு நெட்டிசன்கள் லிங்குசாமிய அஞ்சான் படத்துக்காக வறுத்தெடுத்துகிட்டு இருந்தப்ப, லிங்குசாமிய டிஸ்ச்சார்ஜ் பண்ணி விட்டுட்டு வாலண்டியரா வந்து இணைய ஆசாமிகள்கிட்ட அட்மிட் ஆனவரு நம்ம வெங்கட் பிரபு சார். அந்த சமயத்தில் அவர் பதிவிட்ட மெசேஜ்.
"Movie making is not as easy as u think guys!! We always do our best!! Sometimes it works out
and most of the times it don't. Lingusami Saar is a great film maker!! I worked with him in Ji!!!Every creators are not god!! Even god made mistakes in his creations!! So who are we to judge!!

Hehehe all u guys are so funny but no one makes sense!! Everything that matters to u is whether a movie is a hit or not!! If u guys are good audience why didn't u make Thanga Meengal a hit!!!?!???????? U can only troll us!! But what if we trolled u?!?! We make the movies for u!! We agree but why don't u make a good film a hit?!?"

Mr Venkat Prabhu, One minute please...

"அதாவது சினிமா எடுக்குறது ரொம்பக் கஷ்டம். காமெடி பன்றீங்களே தவற உங்களுக்கெல்லாம் அறிவே இல்ல. தங்க மீன்கள் மாதிரி நல்ல படத்தையெல்லாம் (அப்டின்னு அவரே சொல்லிக்கிறாரு) ஹிட்டாக்க மாட்டீங்க. நீங்க எங்கள கிண்டல் பன்னலாம். நாங்க திரும்பி உங்கள கிண்டல் பன்னா என்ன ஆகும் தெரியும்ல?" ன்னு இண்டர்வல்ல ஹீரோ சவால் விடுற மாதிரி பதிவிட்டு இருந்தாரு.

அவர் சொன்ன மாதிரியே சென்னை - 28 இரண்டாவது பாகத்துல மிர்ச்சி சிவாவுக்கு யூட்யூப் விமர்சகர் கேரக்டர் ஒண்ண குடுத்து விமர்சகர்கள கிண்டலும் பன்னிருக்காரு. சரி ரைட்டு. ஆனா அந்த சிவா கேரக்டருக்கு இண்ட்ரோ குடுக்குறப்ப ஒண்ணு சொல்றாரு பாருங்க. "சினிமாவப் பத்தி இம்மி அளவு கூடத் தெரியாம சினிமாவ விமர்சனம் பன்ற யூட்யூப் விமர்சகர்கள்ல இவனும் ஒருத்தன்"

அதாவது ஒரு நாலஞ்சி படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிட்டு ரெண்டு மூணு படம் டைரக்ட் பன்னவங்க மட்டும்தான் சினிமாவ விமர்சனம் பன்னனும்னு சொல்றாப்ளன்னு நினைக்கிறேன். விமர்சனம் பன்றதுக்கு சினிமா பாக்கத் தெரிஞ்சா போதும். ஏன் சினிமா எடுக்கத் தெரியனும்?

வீட்டுக்கு ஒரு டிவி வாங்குறோம். அது சரியா ஓடலன்னா கம்ப்ளைண்ட் பன்றோம். கடைகாரன் அது என்ன கம்ப்ளைண்ட், அத எப்டி சரி பன்னலாம்னு பாக்கனுமே தவிற கம்ப்ளைண்ட் குடுத்தவன்கிட்ட, இந்த டிவிய எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிருக்காங்க தெரியுமா? இது என்ன டெக்னாலஜின்னு தெரியுமா? இந்த டிவில உள்ள மதர்போர்டு எப்புடி வேலை செய்யிதுன்னு தெரியுமா? அதுல எத்தனை IC இருக்குன்னு தெரியுமான்னுலாம் கேக்கக்கூடாது.

அது என்ன ஆன்னா ஊன்னா சினிமா தெரியாதவங்க சினிமா தெரியாதவங்கன்னு ஆரம்பிச்சிடுறீங்க? உங்களூக்கு சினிமா தெரியிதுன்னா அதுதான் உங்க தொழில். இன்னும் சொல்லப்போனா ஒரு திரைக்கதைய காட்சிப்படுத்துற தொழில நீங்க கத்து வச்சிருக்கீங்க. அவ்வளவுதான். அது நீங்க இருந்த சூழல், உங்க குடும்ப சூழ்நிலைய பொறுத்து நீங்களா தெரிவு செஞ்சிக்கிட்ட ஒரு தொழில்.

நீங்க எந்தெந்த (ஆங்கில ) படங்களையெல்லாம் பாத்து சினிமாவ கத்துக்கிட்டதா நினைக்கிறீங்களோ, அதுக்கும் மேல உள்ள படங்களக் கூட நம்மாளுங்க இப்ப பாத்துக்கிட்டு இருக்காங்க. "எங்க சுட்டாலும் கண்டுபுடிச்சிடுறானுங்களே"ங்குறது கூட உங்க கோவத்துக்கு காரணமா இருக்கலாம்.

எப்பவுமே ஒரு product டெவலப் பன்றவன் ஆயிரம் கஷ்டப்பட்டாலும், output குவாலிட்டிய வச்சிதான் அது வியாபாரம் ஆகும். அவன்பட்ட கஷ்டத்த சொல்லி பொருளை விக்க முடியாது. 'Customer is always right' ன்னு இன்னொரு வாசகம் சொல்லுவாங்க. இந்த இயக்குனர்கள், விமர்சகர்கள் வட்டத்துல இயக்குனர்கள் எப்பவுமே suppliers. விமர்சகர்கள் எப்பவுமே customers. கஸ்டமர் சொல்ற குறைய சரி செய்ய பாக்குறதுதான் ஒரு successful supplier க்கு அழகு.

சினிமா எடுக்குறது உங்களுக்கு கஷ்டமான வேலைன்னா அந்த சினிமாவ பாக்க நாங்க குடுக்குற 120 ரூவாய சம்பாதிக்கிறது எங்களுக்கு கஷ்டமான வேலை. உங்க படத்த குத்தம் சொல்றப்ப உங்களுக்கு எப்டி வலிக்குதோ அதே மாதிரி 120 ரூவா வீணா போனா அத சம்பாதிச்சவனுக்கும் வலிக்கத்தானே செய்யும்.

இந்தப் படத்தோட ஒரு டீசர்ல, முதல்ல சிவா "ச்ச... மாப்ளயக் காணும்.. ஹேங் ஓவர் பார்ட்-3.. அதுக்குன்னு அப்டியேவா அடிப்பீங்க?" ன்னு சொல்லுவாரு. "சார் வெங்கட் பிரபு உங்க அக்கவுண்ட்டுக்கு காசு போட்டாரு" ன்னு ஒரு குரல் சொன்னதும் "சாரி ஃப்ரண்ட்ஸ் இது டோட்டலா வேற படம்" ன்னு மாத்தி சொல்ற மாதிரி ஒரு காட்சி.

அது நூறு சதவீதம் நிஜம்தான். அப்படிப்பட்ட ஈனப் பயலுங்க இருக்கத்தான் செய்யராங்க. ஆனா, அந்த மாதிரி ஆட்களுக்கு காசு கொடுத்து என்கரேஜ் பண்றது யாரு... உங்கள மாதிரி ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும்தானே. நல்ல படம் எடுக்குறவங்க ஏன் இவனுங்களுக்கு காசு குடுக்குறீங்க?

நீங்க நல்ல படங்கள்ன்னு நெனைச்சி எடுக்குறதெயெல்லாம் ஹிட்டாக்கனும்னு மக்களுக்கு எந்த அவசியமும் இல்லை. நீங்க மட்டுமே பாக்குற மாதிரி உங்களுக்கு புடிச்ச ஒரு படத்த எடுப்பீங்க. அப்புறம் அது தியேட்டர்ல ஓடலன்னு நீங்களே ஒப்பாரி வேற வப்பீங்க. மக்களுக்கு புடிச்ச மாதிரி படம் எடுத்தாதானே ஓடும்.

எப்பவுமே 'நல்ல பொழுதுபோக்கு' படங்கள்தான் வியாபார ரீதியா ஹிட்டாகுமே தவிர 'நல்ல படங்களாக' மட்டும் வெளியாகுற 90% படங்கள் கண்டிப்பா வியாபார ரீதியா வெற்றியடையாது. அதுக்காக மக்களுக்கு நல்ல படங்களை ரசிக்க தெரியலைன்னு எந்த ஒரு அர்த்தமும் இல்லை. அவை நல்ல படங்கள்தான், ஆனா தியேட்டருக்கு வந்து பொழுதுபோக்குவதற்கு சரியான படங்கள் அல்ல. அவ்வளவு தான்.

ஒரு படத்த ஹிட்டாக்குறதுலயோ இல்லை ஃப்ளாப்பாக்குறதுலயோ இணையத்துல இருக்குற நண்பர்களோட பங்கு மிக மிகக் குறைவே. பொதுமக்கள படத்த பாக்க வைக்கிற வேலைகளயெல்லாம் நீங்கதான் பாக்கணுமே தவிற இணைய விமர்சகர்கள் அந்த வேலைய செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை.

-முத்து சிவா

English summary
A reply for Venkat prabhu's criticism on social media users and youtube critics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil