Mr X Box Office: சொதப்பிய மனு ஆனந்த்.. ஆர்யா, கெளதம் கார்த்திக்கு அடுத்த ஃப்ளாப்.. மிஸ்டர் எக்ஸ் வசூல்?
சென்னை: மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வெல்சன், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளி வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூலும் ரொம்பவே டல் அடித்து காணப்படுகிறது.
ஆர்யா மற்றும் கெளதம் ராம் கார்த்திக் கடுமையாக உழைத்து தங்களுக்கு இந்த படமாவது கம்பேக் கொடுக்கும் என நினைத்தனர். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் படத்தை அதிக பொருட்செலவில் எடுத்த தயாரிப்பு நிறுவனங்களுக்கும் படம் லாபத்தை ஈட்டித் தர தவறிவிட்டது என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுக்கிறேன் என உப்புமா படத்தை எடுத்து வைத்திருக்கிறார் மனு ஆனந்த் என்றும் முதல் நாள் வசூலே பெரிதாக இல்லாத நிலையில், சனி மற்றும் ஞாயிறு வசூல் சிறப்பாக இருந்தால் தான் படம் கொஞ்சமாவது கலெக்ட் செய்யும் என்கின்றனர்.
4 மாதத்தில் 4 படங்கள் மட்டுமே: தமிழ் சினிமாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதில், 4 படங்கள் மட்டுமே வெற்றிப் படங்கள் என்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் கூட சரியாக ஓடுவதில்லை. தலைவர் தம்பி தலைமையில், வித் லவ், தாய் கிழவி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்கள் மட்டுமே குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், அதிக வசூலை அள்ளி லாபத்தைக் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த வாரம் வெளியான பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இதுவரை 50 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால், அந்த படமும் ஃப்ளாப் தான் என்கின்றனர்.
சொதப்பிய மனு ஆனந்த்: விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு இப்படியொரு சுமாரான படத்தைக் கொடுப்பார் என எதிர்பார்க்கவில்லை என விமர்சகர்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
மிஸ்டர் எக்ஸ் முதல் நாள் வசூல்: தமிழ்நாட்டில் முதல் நாளில் வெறும் 65 லட்சம் மட்டுமே இந்த படம் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் அதிகபட்சமாக 75 லட்சம் மட்டுமே முதல் நாளில் ஆர்யா மற்றும் கெளதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிடைத்துள்ளது என்கின்றனர். முதல் 3 நாட்கள் படம் ஓடினால், அதிகபட்சமாக 2 முதல் 3 கோடி வசூல் வரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications