Mr X Box Office: 3வது நாளில் அதிகரித்த மிஸ்டர் எக்ஸ் வசூல்.. இதுவரை எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் முதல் 2 நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை சற்றே அதிக வசூலை ஈட்டியுள்ளது.

விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் தான் மிஸ்டர் எக்ஸ். தமிழ்நாட்டில் ஜி20 மாநாடு நடைபெற்ற போது அதை சுற்றி நடந்த தீவிரவாத சதிகளை நம்ம நாட்டு ஸ்பை ஏஜெண்ட்டுகள் எப்படி முறியடித்தனர் என்கிற கதையைத்தான் மனு ஆனந்த் படமாக்கியுள்ளார்.

Mr X Day 3 Box Office Collection slightly seems growth compare to first two days

துரந்தர் படத்தில் ஸ்பை ஏஜெண்ட்டுகளை நாட்டுப்பற்று மிக்கவர்களாக காட்டிய நிலையில், இந்த படத்தில் சரத்குமார், கெளதம் ராம் கார்த்திக் உள்ளிட்டோர் டபுள் ஏஜெண்ட்டுகளாக காட்டியிருப்பதும், கிளைமேக்ஸில் நியூக்ளியர் பாம் வெடித்தும் ஆர்யா தப்பித்து வருவதை பார்த்து பலரும் கடுப்பாகிவிட்டனர்.

கிளைமேக்ஸ் மாறியிருந்தால் கூட: மிஸ்டர் எக்ஸ் படத்தின் கிளைமேக்ஸில் நாட்டுக்காக ஆர்யா உயிர் தியாகம் செய்து இறந்திருந்தால் கூட படம் தப்பித்து இருக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், கடலில் வெடிகுண்டு வெடித்த பின்னரும், அண்டர்வாட்டர் எக்ஸ்பர்ட் என்பதால் ஆர்யா தப்பித்து விட்டார் என்றும் கிளைமேக்ஸில் படத்தின் ரியல் வில்லனே அந்த ஏஜெண்ட் தான் என்பதை காட்டும் போது அது படத்துக்கு பலத்தை சேர்ப்பதை விடுத்து பலவீனத்தையே கொடுத்தது என்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை கூடிய வசூல்: மிஸ்டர் எக்ஸ் படத்துக்கு முதல் நாளில் பெரிதாக ஓபனிங் இல்லை. அதற்கு காரணம் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக், அனகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி என பலரும் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வந்த நிலையில், அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து நடித்த படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை. முதல் நாளில் 65 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. 2வது நாளான சனிக்கிழமை 71 லட்சம் வசூல் செய்த நிலையில், 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகபட்சமாக 84 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.

3 நாள் வசூல்: கடந்த வாரம் வெளியான பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படமே நேற்று 1.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 நாட்களில் மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2.2 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமையான இன்று படத்தின் வசூல் மொத்தமாக சுருண்டு விடும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X