பிரபல பெங்காலி இயக்குனர் மிருனால் சென் மரணம்
கொல்கத்தா: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பெங்காலி இயக்குனர் மிருனால் சென் இன்று காலமானார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல இயக்குனர் மிருனால் சென். ஆகாஷ் குசும்(1965), கொல்கத்தா(1971), ஏக் தின் பிரதிதின்(1980), காந்தார் (1984) உள்ளிட்ட பல படங்களை இயக்கிவர் மிருனால் சென்.

பொவானிபூரில் வசித்து வந்த அவர் இன்று காலை 10.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. தாதா சாகேப் பால்கே, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வாங்கிய அவர் ராத் போரே(1955) படம் மூலம் இயக்குனர் ஆனார். திரையுலகிற்கு வந்த உடன் அவருக்கு வெற்றி கிடைத்துவிடவில்லை.
1960ம் ஆண்டு வெளியான பைஷே ஷ்ராவனா படம் தான் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்ரபர்த்தி மிருனால் சென்னின் ம்ரிகயா படம் மூலம் நடிகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிருனால் சென்னின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











