300 கோடிக்கும் மேல் வசூலித்த பிகில்.. வருமான வரித்துறை தகவல்.. ஹேட்டர்களுக்கு ஹாஷ்டேக் மூலம் பதிலடி!
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் வசூல் 300 கோடிக்கும் மேல் என வருமான வரித்துறையினர் அறிவித்துள்ள நிலையில், அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக சொல்லாத வசூலை ஐடி துறை கூறியுள்ளதாக இந்த நேரத்திலும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நேற்று காலை தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய்யிடம் கிட்டத்தட்ட 20 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்றில் இருந்து விஜய் ரசிகர்கள் தொடர்ந்து #WeStandWithTHALAPATHY என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

300 கோடி வசூல்
பிகில் படம் நஷ்டம் என்றும் சரியாக ஓடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், பிகில் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்டுகள் வெளியாகின. ஆனால், அர்ச்சனா கல்பாத்தி பிகில் படத்தின் மொத்த வசூல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
ஐடி ரெய்டுக்கு நன்றி
நேற்று முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யிடம் இருந்து எந்த பணமும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான பிகில் படம் 300 கோடி வசூல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், ரியல் பாக்ஸ் ஆஃபிஸை சொன்னதுக்கு நன்றி என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மிஸ்டர் பெர்ஃபெக்ட் விஜய்
பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியும் இதுவரை எந்த முறைகேடுகளும் உறுதிபடுத்தப்படவில்லை. இதையறிந்த விஜய் ரசிகர்கள் #MrPerfectThalapathyVIJAY என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, விஜய் இந்த பிரச்சனையில் இருந்து மிஸ்டர் க்ளீனாக வெளியே வருவார் என பதிவிட்டு வருகின்றனர்.
ஹேட்டர்களுக்கு ஹார்ட் பிரேக்
பிகில் படத்தின் வசூல் 300 கோடிக்கும் அதிகம் என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், வரும் பிரேக்கிங் நியூஸ்கள் எல்லாம், விஜய் ஹேட்டர்களுக்கு ஹார்ட் பிரேக்கிங் செய்திகளாக மாறி உள்ளன. என்றும் கோலிவுட்டின் வசூல் நாயகன் தளபதி விஜய் தான் என விஜய் ரசிகர்கள் ட்வீட் போட்டு ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.
ஒரு ரூபாய் கூட இல்லை
தொடர்ந்து இரண்டு நாட்களாக நடிகர் விஜய்யிடம் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையில் அவரிடம் இருந்து ஒரு ரூபாயைக் கூட அதிகாரிகள் கைப்பற்றவில்லை என இந்த தீவிர விஜய் ரசிகர் ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார். விரைவில் நடிகர் விஜய்யிடம் மேற்கொண்ட விசாரணை நிறைவடையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications