மிஸ்டர் பர்ஃபெக்ட்.. எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் அதை சிக்சருக்கு அடிப்பதில் விஜய் கில்லி தான்!
சென்னை: மாஸ்டர் படப்பிடிப்பின் போது வந்த வருமான வரி சோதனை மற்றும் பீஸ்ட் படப்பிடிப்பின் போது உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு மற்றும் அதன் கடுமையான தீர்ப்பு என அனைத்திலுமே தான் ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட் என நிரூபித்துள்ளார் நடிகர் விஜய் என அவரது ரசிகர்கள் #MrPerfectThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாகவே நெகட்டிவிட்டிகளை விட்டுத் தள்ளி பாசிட்டிவிட்டிகளையே விரும்புபவர் நடிகர் விஜய்.
ஆனால், நடிகர் விஜய் ஏதோ தேச விரோத செயல் செய்தது போல அவர் பெயரை களங்கப்படுத்தும் விதமாக வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து வெற்றிக் கண்டுள்ளார்.

மிஸ்டர் பர்ஃபெக்ட் விஜய்
எத்தனை துன்பங்கள் வந்தாலும், யார் எப்படி டார்கெட் பண்ணினாலும் அதில் எல்லாம் சிக்காமல் சிறகடித்து பறந்து விடுவார் எங்கள் தளபதி விஜய் என்று நடிகர் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #MrPerfectThalapathyVijay என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பர்ஃபெக்ட் மேன்
வழக்கு தொடர எந்தவொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என வலுவான பாயின்ட்களை நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் எடுத்து வைத்து வாதாடிய நிலையில், நீதிபதி துரைசாமி மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு அபராதத் தொகையை நடிகர் விஜய் செலுத்த தேவையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளதை அறிந்த விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய் பர்ஃபெக்ட் மேன் என ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அவசரப்பட்டு கொண்டாட்டம்
தளபதி விஜய்யின் ஹேட்டர்கள் சீக்கிரமே கொண்டாடி தீர்த்து விட்டனர். ஆனால், எங்க தளபதி எந்தவொரு குற்றமும் தன் மீது இல்லை என வாதாடி ஜெயிப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த எங்களை போன்ற ரசிகர்களின் கொண்டாட்டமே இனி தான் என தளபதி ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு கெத்துக் காட்டி வருகின்றனர்.
Truth always wins 👍#MrPerfectThalapathyVijay #Beast #Master actorvijay pic.twitter.com/oAC8V1gewO
— Vijay (Vijay_Master65) July 27, 2021
லேட்டா ஜெயிக்கும்
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து இந்த ஹாஷ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் விஜய், "ஆனா.. ஒன்னு மட்டும் உறுதிங்க.. தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும்.. ஆனா கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்" என பேசியுள்ளதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

சும்மா கிழி
எப்படி கஷ்டமான பந்து வந்தாலும் சிக்ஸர் அடிக்கும் கில்லி தான் விஜய், இந்த வழக்கையும் சும்மா கிழியென கிழித்து தள்ளி உள்ளார் அந்த பிராண்ட் தான் விஜய் என தளபதி ரசிகர்கள் இந்தியளவில் இந்த ஹாஷ்டேக்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











