பிரபல நடிகை திடீர் திருமணம்.. தனது நீண்ட நாள் காதலரை மணந்தார்.. நடிகர், நடிகைகள் வாழ்த்து!

By

கொச்சி: கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பிரபல நடிகையின் திருமணம் நேற்று நடந்தது. நடிகர், நடிகைகள் மணமக்களை வாழ்த்தினர்.

தமிழில், நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை மிருதுளா முரளி.

இவர், மலையளத்தில் ரெட் சில்லீஸ் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 ஆயாள் ஞான் அல்ல

ஆயாள் ஞான் அல்ல

பகத் பாசிலுடன் இவர் நடித்த, ஆயாள் ஞான் அல்ல என்ற மலையாளப் படம் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியில் ரக்தேஷ் என்ற படத்தில் நடித்தார். இதில், கேப்டன் லட்சுமி சேஹைலாக நடித்திருந்தார். இவரும் உதவி இயக்குனர் நிதின் விஜய் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிதின் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

திருமணம் ஏப்ரல் மாதம் நடக்க இருந்தது. கொரோனா வைரல் பரவல் அதிகமானதை அடுத்து அது தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் கொச்சியில் நேற்று நடந்தது. கொரோனா நிபந்தனைகளுடன் நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

பாடகி சயோனாரா

பாடகி சயோனாரா

நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ஷப்னா, சரண்யா மோகன், பாடகி சயோனாரா, பாடகர் விஜய் யேசுதாஸ், ராகுல் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று மிருதுளா முரளி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X