Mrunal Thakur at Cannes: பகல் கனவுக்காக அடிவாங்கினேன்.. இப்போ கேன்ஸில்.. மிருணாள் தாகூர் நச் போஸ்ட்!

கேன்ஸ்: சீதாராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த மிருணாள் தாகூர் இந்த ஆண்டு முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் பங்கேற்பதாக கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

மேலும், அதற்கு ஒரு கொடுத்துள்ள சூப்பரான கேப்ஷன் ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

Mrunal Thakur at Cannes and shares some hot photos and worthy caption

சீதாராமம் நூர்ஜஹான்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில் சீதாவாகவும் நூர்ஜஹானாகவும் நடித்து ரசிகர்களை சொக்க வைத்தவர் நடிகை மிருணாள் தாகூர்.

விட்டி தண்டு, சுராஜ்யா உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்து வந்த மராத்தி நடிகையான மிருணாள் தாகூர் பாலிவுட்டில் வெளியான லவ் சோனியா படத்தில் நடித்து பிரபலமானார். டோலிவுட்டில் துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான சீதா ராமம் படத்தில் சிறப்பாக நடித்து இளைஞர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் மிருணாள் தாகூர்: கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகைகள் இஷா குப்தா, ஊர்வசி ரவுத்தேலா, மிருணாள் தாகூர், சாரா அலி கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். முதல் முறையாக நடிகை மிருணாள் தாகூர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.

Mrunal Thakur at Cannes and shares some hot photos and worthy caption

டிரன்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட்: கருப்பு நிற கவர்ச்சியான டிரான்ஸ்பரன்ட் உடையை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த தொடையழகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் சீதாராமம் பட நடிகை வெளியிட்டு தனது கேன்ஸ் அனுபவங்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.

கேன்ஸ் 2023 சினிமா விழாவில் பங்கேற்றுள்ள மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Mrunal Thakur at Cannes and shares some hot photos and worthy caption

பகல் கனவுக்காக அடிவாங்கினேன்: அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை மிருணாள் தாகூர் பள்ளியில் பகல் கனவு கண்டதற்காக என் ஆசிரியர்களிடம் நிறைய அடி வாங்கி உள்ளேன்.

ஆனால், இப்போ என் பகல் கனவுகளை நனவாக்கி இங்கே கேன்ஸில் வாழ்ந்து வருகிறேன் என ரொம்பவே ஹேப்பியாக சூப்பரான கேப்ஷன் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X