ஹிட் பாடலால் தலைவலி.. ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு..சிக்கலில் சிக்கிய மிருணாள் தாகூர் படம்!

சென்னை: மிருணாள் தாக்குர், பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் ஜூன் 5ந் தேதி வெளியாக இருந்த நிலையில், படம் தற்போது சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரபலமான பாடல்கள் தொடர்பாக ரூ.400 கோடி நஷ்டஈடு கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், படத்தின் வெளியீட்டைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வருண் தவான், மிருணாள் தாக்குர், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த வழக்கு தயாரிப்புக் குழுவுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

Mrunal Thakur Bollywood
Photo Credit:

இஷ்க் சோனா ஹை: கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிவி நம்பர் 1' திரைப்படத்தில் இடம்பெற்ற "சுன்னரி சுன்னரி" மற்றும் "இஷ்க் சோனா ஹை" பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த பிரபலத்தை பெற்றவை. இந்த இரண்டு பாடல்களும் உரிய அனுமதி பெறாமல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு புதிய படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 'பிவி நம்பர் 1' படத்தை தயாரித்த பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் வாசு பகனானி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனுவில், பாடல்களின் ஆடியோ உரிமைகள் மட்டுமே டிப்ஸ் மியூசிக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், பாடல்களின் வீடியோ மற்றும் ரீமேக் உரிமைகள் தங்களது நிறுவனத்திடமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.400 கோடி நஷ்ட ஈடு: மேலும், உரிமை மீறல் நடந்துள்ளதாகக் கூறி இயக்குநர் டேவிட் தவான், டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தவுரானி, குமார் தவுரானி ஆகியோருக்கு எதிராக ரூ.400 கோடி நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது. அதோடு, சர்ச்சைக்குரிய பாடல்களை திரைப்படத்திலிருந்தும் அனைத்து விளம்பரப் பொருட்களிலிருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் கூடுதலாக ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாசு பகனானி தரப்பு நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த வழக்கு எந்த திசையில் செல்லும் என்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X