எம்.எஸ். பாஸ்கர் வீட்ல விசேஷம்.. பாகுபலி அனுஷ்கா மாதிரியே இருக்காரே ஐஸ்வர்யா.. வளைகாப்பு விழா!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்படும் குணசித்திர நடிகராக எம்.எஸ். பாஸ்கர் வலம் வருகிறார். கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் மிரட்டி விட்டது. சமீபத்தில், வெளியான போட் திரைப்படமும் அவருக்கு சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக ரகு தாத்தா படத்தில் நடித்திருந்தார்.
ஷீலா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வரும் எம்.எஸ். பாஸ்கருக்கு ஆதித்யா பாஸ்கர் என்கிற மகனும் ஐஸ்வர்யா பாஸ்கர் என்கிற மகளும் உள்ளனர். ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். ஆதித்யா பாஸ்கர் 96 படத்தில் அறிமுகமான நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா பாஸ்கர் கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது வளைகாப்பு நிகழ்ச்சியை எம்.எஸ். பாஸ்கர் தனது குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
எம்.எஸ். பாஸ்கர்: தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பாலய்யா, ரங்கா ராவ், விகே ராமசாமி என பல குணச்சித்திர நடிகர்கள் நடித்து மிரட்டினர். அதன் பின்னர், விஜயகுமார், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கினர். ஹீரோக்களுக்கு இணையாக துணை நடிகர்கள் எப்போதுமே தூள் கிளப்பி வரும் நிலையில், சமீப காலமாக எம்.எஸ். பாஸ்கர் அந்த பணியை சினிமாவில் சிறப்பாக செய்து வருகிறார். திருமதி ஒரு வெகுமதி, மக்கள் என் பக்கம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் பிரபலமானார்.

மகள் வளைகாப்பு: எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் சுதாகர் எனும் தனது பள்ளி தோழனையே காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், விரைவில் அம்மாவாக போகிறார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஐஸ்வர்யா பாஸ்கர் சமீபத்தில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட பேபி பம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சந்தோஷத்தில் சகோதரர்: ஐஸ்வர்யா பாஸ்கரின் சகோதரரான ஆதித்யா பாஸ்கர் தனது சகோதரியை கட்டிப் பிடித்து கொஞ்சும் போட்டோக்களும் வெளியாகியுள்ளன. 96 படத்தில் இளம் வயது ராமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆதித்யா பாஸ்கர் வெந்து தணிந்தது காடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ரெபல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொஞ்சும் கணவர்: தனது மனைவி ஐஸ்வர்யா பாஸ்கர் சீக்கிரமே தன்னை அப்பாவாக மாற்றப் போகிறார் என்கிற சந்தோஷத்தில் கணவர் சுதாகர் தனது மனைவியை கட்டியணைத்தும், குழந்தை இருக்கும் வயிற்றுக்கு முத்தமிட்டும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ஐஸ்வர்யா பாஸ்கர் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கே குரல் கொடுத்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











