தீபாவளிக்கு மகாலட்சுமி பொறந்த நேரம்.. அதுக்குள்ள ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ். பாஸ்கர் மகள்!

சென்னை: நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீபாவளி பண்டிகை அதுவுமாக பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகீரா என பெயர் வைத்திருப்பதை தாய் மாமாவான ஆதித்யா பாஸ்கர் தனது மார்புக்கு கீழே பச்சைக்குத்தி வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், மகள் பிறந்த சில மாதங்களிலேயே புதிதாக சொகுசு காரான ஜாகுவார் காரை வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கர். தனது செல்ல மகளின் பாதங்களை அந்த கார் மீது வைத்தபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தற்போது தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார்.

ms bhaskar new car

சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும் ஐஸ்வர்யா பாஸ்கர் அகுல் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையையும் வளைகாப்பு கொண்டாட்ட புகைப்படங்களையும், குழந்தை பிறந்த போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

எம்.எஸ். பாஸ்கர் மகள்: சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வரும் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கர். மகன் ஆதித்யா பாஸ்கர் 96 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஹாட் ஸ்பாட் படத்தில் எல்லாம் அவரது நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது. டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும் ஐஸ்வர்யா பாஸ்கர் இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். அவர் வெளியிடும் இன்ஸ்டா போஸ்ட்டுக்கெல்லாம் ஏகப்பட்ட பேர் ரசிக்ரகளாக உள்ளனர்.

ms bhaskar new car

மகாலட்சுமி பிறந்த நேரம்: சரியாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி மகாலட்சுமி பிறந்துள்ளார் என குழந்தையின் கால் பாதங்களை மட்டுமே காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா பாஸ்கர். குழந்தை பிறந்த நேரம் அடுத்தடுத்து வீட்டில் சந்தோஷ நிகழ்வுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சொகுசு கார் வாங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜாகுவார் காரில் மகளின் கால்: அகுல் சுதாகர் மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கர் தம்பதியினர் புதிதாக விலை உயர்ந்த ஜாகுவார் கார் வாங்கியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். தங்கள் மகளின் கால் பாதங்களை அந்த கார் மீது வைத்தபடி எடுத்த செம க்யூட்டான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

ms bhaskar new car

ஜாகுவார் கார் விலை: சென்னையில் ஜாகுவார் காரின் விலை 70 முதல் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என தகவல்கள் உள்ளன. தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கார் அருகே ஜம்முன்னு நின்றுக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு 'புது தொடக்கம்' என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X