இதுக்கு மேலயும் கஷ்டப்படாம.. நடிகர் ரவிக்குமார் மரணம்.. நேரில் அஞ்சலி செலுத்திய எம்.எஸ். பாஸ்கர் உருக்கம்

சென்னை: சித்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் ரவிக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உருக்கமாக பேசிய காட்சிகள் ரசிகர்கள் மனங்களை உருக வைத்துள்ளது.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவர்கள், பகலில் ஓர் இரவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகர் ரவிக்குமார். தொடர்ந்து கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து ஏகப்பட்ட சினிமா சார்ந்த பிரபலங்கள் உயிரிழந்து வருவது ரசிகர்களையும் திரைத்துறையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MS Bhaskar emotional talks after attending Actor Ravikumar funeral

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, பத்ரி படத்தின் மூலம் பிரபலமான கராத்தே மாஸ்டர் ஹுசைனி, மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மூன்றாவது மனைவி தாமரைச்செல்வி என பலர் உயிரிழந்து வரும் நிலையில், ரவிக்குமாரின் மரணமும் தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரவிக்குமார் மரணம்: ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பார் ரவிக்குமார். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இவர் சித்தி சீரியலில் லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட தாய்மார்களின் அன்புக்கு பாத்திரமாகவே வாழ்ந்தார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எம்.எஸ். பாஸ்கர் நேரில் அஞ்சலி: சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்து பிரபலமான ரவிக்குமார் மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதுக்கு மேலயும் கஷ்டப்படாம: வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே ரவிக்குமார் கஷ்டப்பட்டு வந்த நிலையில், இதுக்கு மேல கஷ்டப்படாம போயிட்டீங்க அண்ணா என எம்.எஸ். பாஸ்கர் உருக்கமாக பேசியது ரசிகர்களை உலுக்கியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக் காரணமாக ரவிக்குமார் கஷ்டப்பட்ட வந்ததை எல்லாம் கூடவே இருந்து பார்த்தவர் எம்.எஸ். பாஸ்கர் என்கின்றனர். திரையுலகில் இருந்து ரவிக்குமார் மறைவுக்கு பெரிதாக நடிகர்க்ள் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும், எம்.எஸ். பாஸ்கர் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X