விஜயகாந்த் சமாதிக்கு முன்பு விழுந்து வணங்கிய எம்.எஸ். பாஸ்கர்.. உறைந்து போய் உட்கார்ந்துட்டாரு!

சென்னை: புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக மாறியுள்ளது. அவர் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள் பல நடிகர்கள். அவரது மறைவு நடிகர்களை உலுக்கி எடுத்து அவரது சமாதியை பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நடிகர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளை தொடர்ந்து பார்க்க முடிகிறது. பொதுமக்களும் தொடர்ந்து வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.

எம்.எஸ். பாஸ்கர் தமிழ் சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா டிவி தொடர் மூலம் பிரபலமான அவர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தில் ஒரு சின்ன காமெடி ரோலில் நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில், விஜயகாந்த் மறைவை தாங்க முடியாமல் அவர் சமாதி முன்பாக எம்.எஸ். பாஸ்கர் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்த காட்சிகள் ரசிகர்களை உருக செய்துள்ளன.

MS Bhaskar feels bad at Vijayakanth memorial place

எங்கள் அண்ணா: 2004ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் எங்கள் அண்ணா. விஜயகாந்த், பிரபுதேவா, நமீதா, சுவர்ணமால்யா, லால், பாண்டியராஜன், வடிவேலு மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். அந்த படத்தில் வடிவேலு, பாண்டியராஜன் நடுரோட்டில் செய்யும் காமெடியில் குடிகாரனாக பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இருக்கும் எம்.எஸ். பாஸ்கர் திட்டியபடியே செய்யும் காமெடி காட்சிகள் இப்போது பார்த்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து விடும். பட்டாசு கடையில் வெடித்து சிதறி கடைசியாக பீடி இருக்கா என எம்.எஸ். பாஸ்கர் கேட்க வடிவேலு பிஜிலி வெடியை வாயில் வைத்து வெடிக்க வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

MS Bhaskar feels bad at Vijayakanth memorial place

விழுந்து வணங்கினார்: பெரிய மாலையை எடுத்துக் கொண்டு விஜயகாந்த் சமாதி மீது போட்ட எம்.எஸ். பாஸ்கர் அப்படியே விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சில நிமிடங்கள் பித்துப் பிடித்தவர் போல அமைதியாக அப்படியே உறைந்துப் போய் உட்கார்ந்துக் கொண்டு கண்கலங்கியபடி விஜயகாந்த் பற்றிய நினைவுகளில் மிதந்து அவரது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். அந்த காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X