'கர’ படத்தில் நடித்த இந்த நடிகரை அடையாளம் கண்டு பிடிக்க முடிந்ததா?.. தனுஷை விட கலக்கிட்டாரு!

சென்னை: பொதுவாக தனுஷ் நடிக்கும் படங்களில் மற்ற நடிகர்களை கண்டிப்பாக அவரது நடிப்பு ஓவர்டேக் செய்துவிடும். நடிப்பு அசுரன் என்றும் கலை அரசன் என்றும் பெயர் எடுத்தாலும் தனுஷ் என்று அழைப்பதையே விரும்புவதாக தெரிவித்தார்.

கர படத்திலும் ஒரு திருடனாக வித்தியாசமான நடிப்பை வெளிபப்டுத்தியிருப்பார் தனுஷ். ஆனால், அவரையே படத்தில் ஒருவர் ஓவர்டேக் செய்துவிட்டார் என்று சொன்னால், நீங்க நம்பவில்லை என்றாலும் நம்பித்தான் ஆகவேண்டும்.

MS Bhaskar lived as a Old Farmer role in Dhanush s Kara movie is Outstanding

இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர' படத்தில் கடன் பட்ட விவசாயி முதியவர் தோற்றத்தில் நடித்திருந்தது வேறு யாருமில்லை நம்ம நடிகர் எம் எஸ் பாஸ்கர் தான். நடித்திருந்தார் என்று சொல்வதை விட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பை தற்போது பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை அவரை பலராலும் அடையாளம் காணவே முடியவில்லை.

கே.எஸ். ரவிக்குமார் முதல் மமிதா பைஜு வரை: கர படத்தில் விக்னேஷ் ராஜா சில இடங்களில் கோட்டை விட்டு இருந்தாலும், மேக்கப் விஷயத்திலும் நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக காட்டும் விதத்திலும் மிகப்பெரிய சிக்ஸர் அடித்துள்ளார் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. குறிப்பாக கே.எஸ். ரவிக்குமார் லுக், மமிதா பைஜு கதாபாத்திரம், கருணாஸ் ரோல், ஜெயராமுக்கு வழங்கப்பட்ட வில்லன் ரோல் என அனைத்து நடிகர்களும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தனர்.

MS Bhaskar lived as a Old Farmer role in Dhanush s Kara movie is Outstanding

தனுஷை ஓவர்டேக் செய்த எம்.எஸ். பாஸ்கர்: சில படங்களில் எந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகர் நடித்தாலும் அந்த நடிகர் ரசிகர்களுக்கு தெரிவார். கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருந்தாலும் அவர் அந்த நடிகராகவே தெரிவார். ஆனால், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முற்றிலும் மாறுபட்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். நடிகர் எம் எஸ் பாஸ்கர்தான் நடித்திருக்கிறார் என்று பல பேருக்கு தெரியவில்லை. அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரியவில்லை. சிலர் குரலை வைத்து அவர் நடித்திருக்கிறார் என்று ஓரளவுக்கு கண்டுபிடித்தார்கள். அந்த குரலிலும் கூட தள்ளாத வயதில் நா தழுதழுக்க பேசுகின்ற குரலில்தான் பேசி இருந்தார். காந்தாரா படத்தில் வயதான மாயக்காரா கதாபாத்திரத்தில் நடித்தது பலருக்கும் படம் பார்க்கும் போது தெரியாமல் இருந்தது போலவே எம்.எஸ். பாஸ்கரும் இந்த படத்தில் தனது நடிப்பால் சதம் அடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X