பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கிறாரா அந்த சீனியர் நடிகர்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 தொடர்பாக மூத்த நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
இதற்கான பணிகளில் பிக்பாஸ் டீம் தீயாய் இறங்கியுள்ளது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நாள்தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

மாறும் தொகுப்பாளர்?
கடந்த நான்கு சீசன்க கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளர் மாற்றப்படவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு நடிகர் சிம்புவிடம் பேசி வருவதாக கூறப்பட்டது.

குக் வித் கோமாளி
ஆனால் அதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து நடிகர் நகுல், குக் வித் கோமாளி பிரபலங்களான கனி மற்றும் சுனிதாவிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

யூட்யூப் பிரபலம்
ஆனால் அந்த தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதோபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவரும் யூட்யூப் பிரபலமுமான இனியன் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆர்ஜே வினோத்
இதேபோல் பிரபல ஆர்ஜேவும் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலை சேர்ந்தவருமான ஆர்ஜே வினோத் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்தும் இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

எம்எஸ் பாஸ்கர்?
இந்நிலையில் மூத்த நடிகரான எம்எஸ் பாஸ்கரிடம் பிக்பாஸ் டீம் பேசி வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் ஒரு சீனியர் நடிகர்கள் சிலர் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் முதல் சீசனில் கஞ்சா கருப்பு, வையாபுரி ஆகியோர் பங்கேற்றனர்.

மோகன் வைத்யா
இரண்டாவது சீசனில் நடிகர் பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், தாடி பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். மூன்றாவது சீசனில் இசைக் கலைஞர் மோகன் வைத்யா, நடிகர் சரவணன், இயக்குநர் சேரன் ஆகியோர் பங்கேற்றனர்.

சுரேஷ் சக்கரவர்த்தி
பிக்பாஸ் நான்காவது சீசனில், சுரேஷ் சக்கரவர்த்தி, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். அந்த வகையில் சீசன் 5ல் மூத்த நடிகரான எம்எஸ் பாஸ்கரை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது விஜய் டிவி.

விசு படத்தின் மூலம்
நடிகர் எம்எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார். விசுவின் திருமதி ஒரு வெகுமதி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எம்எஸ் பாஸ்கர், ஏரானமான சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











