120 ரூபாய் வச்சு ஒண்ணும் கோபுரம் கட்ட போறதில்லை.. ரசிகர்களுக்கு உத்தரவு போட்ட எம்.எஸ். பாஸ்கர்!
சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி என விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லாந்தர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எம். எஸ். பாஸ்கர் படங்களை பார்த்து விட்டு பிடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் நல்லா இல்லை என மற்றவர்களிடம் சொல்லக் கூடாது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பை ஏகப்பட்ட ரசிகர்கள் நடித்து வரும் நிலையில், அவரிடம் இருந்து இப்படியொரு வார்த்தை வரும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் மக்களை பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாமல் வெறும் சினிமாக்காரராகவே எம்.எஸ். பாஸ்கர் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லாந்தர் இசை வெளியீட்டு விழா: வரிசையாக நடிகர் விதார்த் பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் ஓடுகிறதோ இல்லையோ? அதையெல்லாம் பார்க்காமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள லாந்தர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு டெவில், அஞ்சாமை உள்ளிட்ட படங்களில் விதார்த் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ். பாஸ்கர் பேச்சு: சினிமாவுக்கு வந்து ஒரு படத்தை பார்த்தீர்கள் என்றால் படம் பிடித்திருந்தால், பாராட்டுங்கள். இல்லையென்றால் அமைதியாக இருந்து விடுங்கள். உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ படத்தை போய் பார்க்க வேண்டாம் என சொல்லாதீங்க என எம்,எஸ். பாஸ்கர் பேசியுள்ளார்.
120 ரூபாய்ல கோபுரம் கட்டப் போவதில்லை: பொதுமக்கள் 120 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கின்றனர். அதை வைத்து யாரும் மாடமாளிகையோ கூட கோபுரமோ கட்டப் போறதில்லை என எம்.எஸ். பாஸ்கர் பேசியதும் அரங்கத்தில் இருந்தவர்களின் முகமே மாறிவிட்டன. சினிமாவில் பலர் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நீங்க கொடுக்கிற டிக்கெட் பல குடும்பத்தை வாழ வைக்கும். படம் பிடிக்கவில்லை என்றால், படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் இருந்து மொக்கை, யாரும் தியேட்டருக்கு வர வேண்டாம் என போட்டு படத்தை காலி பண்ணிடுறாங்க என பேசியுள்ளார். நல்ல படத்தை எடுக்க வேண்டும் என சினிமா கலைஞர்களுக்கு அறிவுரை வழங்காமல் படம் நல்லா இல்லை என விமர்சிக்கக் கூடாது என எம்.எஸ். பாஸ்கர் பேசுவது சரியல்ல என நெட்டிசன்கள் அவருக்கு எதிரான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சிங்கத்துக்கு வாலா இருக்கிறதை விட: பெரிய படங்களில் ஏன் நடிப்பதில்லை. சிறு படங்களில் மட்டுமே நடிக்கிறீங்களே என கேட்கிறாங்க. பெரிய படங்களில் நடிக்க பெரிதாக யாரும் அழைப்பதில்லை. சிங்கத்துக்கு வாலா இருக்கிறதை விட ஈக்கு தலையாக இருந்து விட்டு போகலாம் என சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறேன் என பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தையும் எம்.எஸ். பாஸ்கர் மேடையில் கொட்டித் தீர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











