டூத் பேஸ்ட் கம்பேனியில் வேலை பார்த்தேன்.. தெருத்தெருவா அலைந்தேன்.. எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!

சென்னை : பட வாய்ப்பைத் தேடி தெருத்தெருவாக அலைந்தேன் என்று குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டப்பிங் கலைஞரான இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமானார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், மாதவன், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் எம்.எஸ். பாஸ்கர்.

நடிகம் எம்.எஸ்.பாஸ்கர்

நடிகம் எம்.எஸ்.பாஸ்கர்

நடிகம் எம்.எஸ்.பாஸ்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போது வந்தது என்று தெரியவில்லை. ஆனால் , நல்ல நடிகன் என்று பெயர் எடுக்க கடுமையாக உழைத்தேன், உழைத்துக்கொண்டு இருக்கிறேன், தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன்.

தனித்தன்மையோடு இருப்பேன்

தனித்தன்மையோடு இருப்பேன்

எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடன் நான் நடித்தாலும், நான் தனித்தன்மையோடு தனியாக தெரியவேண்டும் என்பதற்காக, கதை சொல்லும் போதே அந்த கதாபாத்திரத்தை நான் மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன், கதை என்ன, என் கதாபாத்திரம் என்ன என்பதில் மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே இருப்பேன். செட்டிற்குள் தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டேன், செல் போனை பார்க்க மாட்டேன், இயக்குநர் என்னிடம் எதிர்பார்ப்பதைவிட சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

எனக்குள் இருந்த வெறி

எனக்குள் இருந்த வெறி

டூத் பேஸ்ட் கம்பேனியில் நான் வேலை செய்து கொண்டு இருந்தேன், அப்போதும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரிடம் வாய்ப்பு கேட்டு அலைந்து இருக்கிறேன், பார்க்கும் இயக்குநர்களிடம் போய் வாய்ப்பு கேட்பேன், அவர்கள் பார்க்கலாம் என்பார்கள். ஆனால், எனக்குள் இருந்த வெறிதான் இந்த இடத்திற்கு என்னை கொண்டு வந்தது.

சின்ன பாப்பா பெரிய பாப்பா

சின்ன பாப்பா பெரிய பாப்பா

என் நண்பர் மூலமாக சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வாழ்க்கை, என் பெயர் ரங்கநாயகி, உயிரே உயிரே என பல சீரியல்களில் நடித்தேன். என்னுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது சன் தொலைக்காட்சிதான் அதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன். கடைசி செல்வி சீரியலில் நடித்தேன் அதன் பிறகு தான் சீரியல் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார். ஆனால், மீண்டும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.

சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்

சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்

தொடர்ந்து பேசிய எம்.எஸ் பாஸ்கர், பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும், இதுபோன்ற தவறு செய்பவர்களை பாரபட்சம் இல்லாமல், ஈவு இறக்கம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.பாஸ்கர் பேட்டியில் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X