விஜய் சேதுபதியாக நடிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மகன்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் எம்.எஸ்.பாஸ்கர். அடிப்படையில் டப்பிங் கலைஞர். கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்யும் எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் டப்பிங் கலைஞர்தான். இப்போது பாஸ்கர் வீட்டில் இருந்து இன்னொரு வாரிசு சினிமாவுக்கு வருகிறார்.
எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடிகராக அறிமுகமாகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஒளிப்பதிவாளர் ப்ரேம் இயக்கும் 96 படத்தில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் நடிக்கிறார்கள்.

இருவரது வாழ்க்கையும் 6 வயதில் இருந்து 96 வயது வரையில் முடிவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிக்க பொருத்தமான நபரை தேடிக்கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வேடத்தில்தான் ஆதித்யா பாஸ்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சின்ன வயது த்ரிஷாதான் இன்னும் கிடைக்கவில்லையாம்.
Comments


Click it and Unblock the Notifications