பிரபல நடிகரின் பெண் மேனேஜர் திடீர் தற்கொலை.. உடனிருந்த வருங்கால கணவர்.. பரபரப்பில் திரையுலகம்
மும்பை: பிரபல நடிகர் உள்பட பல பாலிவுட் நடிகர்களுக்கு மேனேஜராக இருந்த திஷா சலியான் திடீரென தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை கிளப்பி உள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எக்ஸ் மேனேஜராக இருந்தவர் திஷா சலியான்.
கடந்த திங்களன்று தனது அப்பார்ட்மென்ட் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் பாலிவுட்டில் பூதாகரமாகி உள்ளது.

தோனி பட ஹீரோ
டிவி நடிகராக புகழ்பெற்று வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2013ம் ஆண்டு அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான கை போச்சே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பி.கே, ராப்டா, கேதார்நாத், சோன்சிரியா, ட்ரைவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானார்.

பாலிவுட் பிரபலம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் மேனேஜராக பல காலம் பணியற்றியவர் திஷா சலியான். சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமின்றி, நடிகை ஐஸ்வர்யா ராய், பார்த்தி ஷர்மா, ரியா சக்கரபார்த்தி மற்றும் ஃபக்ரி நடிகர் வருண் ஷர்மா என பல பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார் மறைந்த திஷா சலியான்.

14வது மாடியில் இருந்து
விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மும்பை, மலாத் பகுதியில் உள்ள அவரது அப்பார்ட்மென்ட்டின் 14வது மாடியில் இருந்து கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8) குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. திஷா சலியானின் இந்த திடீர் மரண செய்தியை அறிந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நிலை குலைந்து போனேன்
எம்.எஸ். தோனி படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தனது முன்னாள் மேனேஜர் உயிரிழந்த செய்தி அறிந்து, தான் நிலை குலைந்து போனதாகவும், திஷாவின் குடும்பத்தாருக்கு தனது நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண், "என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இந்த பேரிழப்பு நெஞ்சை நிலை குலைய செய்துள்ளது" என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உடனிருந்த வருங்கால கணவர்
திஷா சலியான் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டபோது, அவர் உடன் அவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட வருங்கால கணவர் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. திஷாவின் பெற்றோர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், அடுத்தபடியாக திஷாவின் ஃபியான்ஸியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











