»   »  இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக 60 நாடுகளில் 4,500 தியேட்டர்களில் ரிலீஸாகும் டோணி

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக 60 நாடுகளில் 4,500 தியேட்டர்களில் ரிலீஸாகும் டோணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணி பற்றிய படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படம் வரும் 30ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் சிஇஓ விஜய் சிங் கூறியிருப்பதாவது,

டோணி

டோணி

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. மேலும் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்ட ஒரு இந்தி படம் அதிக தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

60 நாடுகள்

60 நாடுகள்

டோணி படத்திற்கு உலக அளவில் கிராக்கி அதிகம் உள்ளதால் அதை 60 நாடுகளில் வெளியிடுகிறோம். இந்த படம் மொத்தம் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

மராத்தி

மராத்தி

டோணி படத்தை உலக அளவில் அதிக தியேட்டர்களில் குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளதால் அதை மராத்தி மற்றும் பஞ்சாபியில் டப் செய்து வெளியிடும் பணி தற்போதைக்கு நடக்காது என்று சிங் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படத்தை ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட்டுடன் சேர்ந்து டோணியும் விளம்பரப்படுத்தி வருகிறார். சுஷாந்த் படத்தில் டோணியாகவே வாழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

English summary
MS Dhoni: The Untold Story will be released in 4,500 screens across 60 countries, the widest release for an Indian movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil