அடேங்கப்பா.. ‘தல’ தோனிக்கும் கோலிவுட் ஹீரோக்களுக்கும் இப்படியொரு கனெக்‌ஷன் இருக்கா!

சென்னை: எம்.எஸ். தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பு நேற்று பல கோடி ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கும்.

Recommended Video

Dhoni Retirement: கண்கலங்கிய ரசிகர்கள்

மோகன் லால் முதல் சிவகார்த்திகேயன் வரை பல பிரபலங்கள் தோனிக்கு பிரியா விடை கொடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக திகழும் தோனியும் தென்னிந்திய பிரபலங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் சந்தித்துக் கொண்ட அழகான தருணங்களை இங்கே காண்போம்.

படத்தின் புரொமோஷனுக்காக

படத்தின் புரொமோஷனுக்காக

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த எம்.எஸ். தோனியின் பயோபிக் படத்திற்கான தமிழக புரொமோஷனுக்காக வந்த கிரிக்கெட் வீரர் தோனி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் ஆசி பெற்று சென்றார். ரஜினிகாந்தை சந்தித்து பேசிய வீடியோவை தோனி தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார். அதில், தோனியின் விளையாட்டை தான் ரசித்துப் பார்ப்பதாக ரஜினி கூறியுள்ளார்.

நட்சத்திர தூதர்

நட்சத்திர தூதர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2008ம் ஆண்டு தோனி வரும் போது, சென்னை அணியின் நட்சத்திர தூதர்களாக தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நியமிக்கப்பட்டனர். தல தோனியுடன் தளபதி விஜய் இருக்கும் அழகான தருணங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில், தோனியின் ஓய்வு அறிவிப்புக்கு பிறகு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டை ஆள வேண்டும்

நாட்டை ஆள வேண்டும்

'தல' தோனியின் தீவிர ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவன், கடந்த 2018ம் ஆண்டு தனது வாழ்நாள் கனவு நினைவானதாக தோனியுடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டு இருந்தார். தோனியிடம் ஆட்ட திறமை மட்டும் அல்ல நாட்டையே ஆளும் திறமையும் இருக்கிறது. அவர் ஒரு நாள் நம் இந்தியவை ஆள வேண்டும் என்றும் பதிவிட்டு இருந்தார்.

தோனியும் சரத்குமாரும்

தோனியும் சரத்குமாரும்

சிங்கப்பூரில் மகேந்திர சிங் தோனி தொடங்கிய கிரிக்கெட் அகாடமியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் தோனியுடன் நீண்ட நேரம் நிறைய விஷயங்களை பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேற லெவலில் வைரலாகின. சரத்குமார் ரசிகர்கள் தற்போது அதனை ஷேர் செய்து செண்ட் ஆஃப் கொடுத்து வருகின்றனர்.

பிடித்த நடிகர்

பிடித்த நடிகர்

கோலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர் சூர்யா என்றும், அவரது சிங்கம் படத்தை எல்லாம் ரொம்ப விரும்பி பார்த்தேன் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசிய வீடியோவை சூர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும், எம்.எஸ். தோனி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், சூர்யாவின் குழ்னதைகளுடன் தோனி பேசிய புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X