Thalapathy 68 - தளபதி 68.. தளபதி விஜய்யுடன் இணையும் தல.. இது லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68 படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். வெங்கட் பிரபுவின் படங்கள் அனைத்தும் ஜாலியான ஜானரில் இருக்கும் என்பதாலும் விஜய்க்கும் அந்த ஜானர் முழுக்க முழுக்க ஒத்துப்போகும் என்பதாலும் இந்த படத்தின் மீது இப்போதே பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் அறிவிப்பு வெளியானதும் லியோ படத்தின் மீதான பேச்சுக்கள் குறையும் அளவு இதுபற்றிய பேச்சுக்கள் இருந்தன.

MS Dhoni Will Act in Thalapathy 68 Movie

எப்போ அப்டேட்ஸ்: படத்தின் பூஜை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியே நடைபெறும் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் பூஜை போட்டுவிட்டால் லியோ மீதான கவனம் குறைந்துவிடும் என நினைத்த விஜய் அதனை தள்ளி வைத்தார்.லியோ ரிலீஸுக்குப் பிறகுதான் இப்படத்தின் மீதான அப்டேட்டுகள் அனைத்தும் வெளிவரும் என்று வெங்கட் பிரபுவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்முர பணியில் வெங்கட் பிரபு: அவர் இப்போது தனது உதவி இயக்குநர்களுடன் படத்தின் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா புதிய கீதை படத்துக்குப் பிறகு இசையமைக்கிறார். யுவனின் இசை என்பதால் நிச்சயம் இந்த படத்தின் இசை அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆகும் என்று யுவன் ரசிகர்களும் தளபதியின் ரசிகர்களும் நம்பிக்கையோடு இருக்கின்றனர். அது மட்டுமின்றி படத்தின் ஆடியோ ரைட்ஸ் இப்போதே 24 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

விஜய் சம்பளம் இவ்வளவா? மேலும் திருமலை படத்துக்கு பிறகு ஜோதிகா இதில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு இப்படத்திற்காக 175 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகி கோலிவுட்டை ஷாக் ஆக்கியது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

MS Dhoni Will Act in Thalapathy 68 Movie

தல தோனி: இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெங்கட் பிரபுவும் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் இது நடந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

தோனி இதற்கு முன்னதாக எல்ஜிஎம் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தோனியை தவிர்த்து இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீ சாந்த், சடகோபன் ரமேஷ் போன்ற கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X