அடல்ட் அலர்ட்: கிளைமேக்ஸ், நேக்கட் படங்களுக்கு போட்டியாக வரும் ‘டர்ட்டி ஹரி’.. ஆன்லைனில் ரிலீஸா?

ஹைதராபாத்: சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான அடல்ட் படங்களான கிளைமேக்ஸ் மற்றும் நேக்கட் படங்களுக்கு போட்டியாக மற்றொரு தெலுங்கு படமான 'டர்ட்டி ஹரி' வெளியாகவிருக்கிறது.

தளபதி விஜய்யின் கில்லி படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படமும் Pay per view கான்செப்டில் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.ஜி.வி போட்ட பாதை

ஆர்.ஜி.வி போட்ட பாதை

'அடல்ட்' படங்களுக்கான மார்க்கெட் எப்போதுமே இருந்து வரும் நிலையில், அதனை சமீபத்தில் கையில் எடுத்த சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து கிளைமேக்ஸ் எனும் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நேக்கட் எனும் படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்த அவர் அடுத்ததாக திரில்லர் எனும் '18+' படத்தையும் இயக்கி வருகிறார்.

ஆபாச வெப்சீரிஸ்

ஆபாச வெப்சீரிஸ்

நிர்வாண காட்சிகளை காண இனி ஹாலிவுட் படங்களை பார்க்க தேவையில்லை என்கிற அளவுக்கு ஏகப்பட்ட ஆபாச வெப்சீரிஸ்கள் OTT தளங்களில் நிரம்பி வழிகின்றன. எம்.எக்ஸ் பிளேயர், அமேசான் பிரைம், ஜி5 சினிமாஸ், நெட்பிளிக்ஸ் என எதை திறந்து பார்த்தாலும், இளைஞர்களை கவரும் வகையிலான ஆபாச வெப் சீரிஸ்கள் தான் அணி வகுத்து நிற்கின்றன.

ஈஸியா சம்பாதிக்கலாம்

ஈஸியா சம்பாதிக்கலாம்

நல்ல திரைக்கதை அமைத்து, நடிப்பு திறமையை வெளிக்காட்டும் படங்களை தற்போது உருவாக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதால், வெறும் வீட்டுக்குள்ளே வைத்து, ஆடைகளை அகற்றி இது போன்ற ஆபாச படங்களை ஆர்.ஜி.வி போன்ற பிரபல இயக்குநர்களும் எடுத்து காசு சம்பாதித்து வருகின்றனர்.

டர்ட்டி ஹரி

டர்ட்டி ஹரி

கிளைமேக்ஸ், நேக்கட், திரில்லர் என ராம் கோபால் வர்மா எடுத்துத் தள்ளி வசூல் ஈட்டி வரும் நிலையில், ஒக்கடு படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு தற்போது ‘டர்ட்டி ஹரி' எனும் அடல்ட் படத்தை இயக்கி உள்ளார். லாக்டவுனுக்கு முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டதாகவும், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

மீண்டும் சர்ச்சை கிளம்பிய Ram Gopal Varma | #RGV
ஒரே முத்தக் காட்சி தான்

ஒரே முத்தக் காட்சி தான்

ஷ்ரவன் ரெட்டி, ருஹானி ஷர்மா மற்றும் சிம்ரத் கவுர் நடிப்பில் ‘டர்ட்டி ஹரி' படம் உருவாகி இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தை முதலில் தொடங்க நினைத்துள்ளார் இயக்குநர் எம்.எஸ். ஹரி, ஆனால், நடிகர்கள் கால்ஷீட் கிடைக்காததால், அறிமுக நடிகர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தின் ஹாட் லிப் கிஸ் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

பாத் டப்பில்

அறிமுக ஹீரோ ஷ்ரவன் ரெட்டி, ஷர்ட் அணியாமல், பாத் டப்பில் புகைப்பிடித்த படி படுத்திருப்பது போலவும், அவரது மார்பில், பெண் ஒருவரின் கால்கள் இருப்பது போன்ற போல்டான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் தெரிகிறது.

OTT ரிலீஸ்

கிளைமேக்ஸ், நேக்கட் படங்களை போல இந்த படமும் நேரடியாக ஆன்லைனில் OTT இயங்கு தளத்தில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வைரலாக கசிந்து வருகிறது. விரைவில், எந்த தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு முன்னதாக வானா, டுனிகா டுனிகா உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X