»   »  மருத்துவமனையில் எம்.எஸ்.வி!

மருத்துவமனையில் எம்.எஸ்.வி!

Subscribe to Oneindia Tamil

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது.


மெல்லிசை மன்னர் என்று தமிழ் திரை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும்எம்.எஸ்.வி. என்றும் இறவா புகழ் படைத்த பல பாடல்களை இயற்றி இன்றளவும்தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பசுமை மாறாமல் தவழ விட்ட பெருமைக்குரியவர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவைச்சிகிச்சை நடந்துள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குமாற்றப்பட்டார். அங்கு அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரதுகுடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு எம்.எஸ்.வி.மருத்துவமனையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

78 வயதாகும் எம்.எஸ்.வி. தனியாகவும், இன்னொரு மெல்லிசை மன்னரானராமமூர்த்தியுடன் இணைந்தும் எண்ணற்ற சாகாவாரம் படைத்த பாடல்களைபடைத்துள்ளார்.

Read more about: msv undergoes heart surgery

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil