Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யுவன் சங்கர் ராஜாவுடன் பாடி ஆடிய எம்எஸ் விஸ்வநாதன்
1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் ரீமேக் ஆகிறது.
இதில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும், மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர்.
பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக முதன் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தில்லு முல்லு தில்லு முல்லு' எனத் தொடங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் எம்.எஸ்.வியுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் ஆடியிருக்கிறார்.
இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், "என் தந்தை இளையராஜாவும் எம்எஸ்வியும் இணைந்து நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தற்போது 'தில்லு முல்லு' ரீமேக்கிற்காக நான் எம்எஸ்வியுடன் இணைந்து இசையமைத்துள்ளேன். இதைவிட வேறு பெருமை இல்லை.
பழைய 'தில்லுமுல்லு' படத்தில் இடம்பெற்ற 'தில்லு முல்லு தில்லு முல்லு ' என்ற பாடலுக்கு வரிகளை மாற்றாமல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடலுக்கு எம்எஸ்வியுடன் இணைந்து பாடியதோடு, அவருடன் ஆடினேன்" என்றார்.
இதுகுறித்து எம்எஸ் விஸ்வநாதன் கூறுகையில், 'யுவனுடன் பணியாற்றியது ஒரு புதிய அனுபவம். இப்படி ஆடிப் பாடுவது இன்னும் புதிய அனுபவம்," என்றார்.