#thalapathy63: பெருசா எதிர்பார்த்து புஸ்ஸாப் போன அப்டேட்

By Siva

சென்னை: தளபதி 63 அப்டேட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார் என்பதை தவிர தளபதி 63 படம் பற்றி பெரிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. தளபதி 63 படத்தில் விஜய்யின் நண்பராக கதிர் நடிப்பது அனைவருக்கும் தெரியும்.

Much awaited Thalapathy 63 update is here

இந்நிலையில் தளபதி 63 பற்றி அப்டேட் கேட்டு கேட்டு கெஞ்சிக் கதறி விஜய் ரசிகர்கள் டயர்டானார்கள். அவர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் அப்டேட் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் அவர்கள் ஒரு முடிவு செய்து பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார்கள்.

நமக்கு தான் ஒரு ஹேஷ்டேகை உருவக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்ய விடுவது கை வந்த கலையாச்சே என்று நினைத்து தளபதி 63 அப்டேட் கேட்டு #WeWantT63ThiruvizhaUpdate என்ற ஹேஷ்டேகை தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர். அவர்களின் முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்துவிட்டது.

அவர்கள் இத்தனை நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 63 அப்டேட் ஜூன் 19ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவித்தபடி அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் ரசிகர்கள் எதிபார்த்த அப்டேட் கிடைக்கவில்லை.

ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், 22ம் தேதி செகண்ட் லுக்கும் வெளியாகும் என்று அர்ச்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏதோ பெரிதாக அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் லைட்டா ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த அப்டேட்டுக்குத் தான் இந்த பில்ட்அப்பாக்கும், அட போங்கக்கா என்று ரசிகர்கள் அலுத்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X