சிவகார்த்திகேயனின் புது படம் பற்றி தெரியுமா?...லேட்டஸ்ட் அப்டேட் இதோ
சென்னை : கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான், டான் என வரிசையாக படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களையும் தயாரித்தது.

தற்போது மூன்றாவது படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு வாழ் என பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலை அரசு தயாரிக்கிறார். அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரதீப் ஆன்டனி, டிஜெ பானு, ஆரவ், திவா தவான், நித்யா, ஸ்ரீஜா, இன்மொழி, மயூரா, பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனிலைவில் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் டிரைலர் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











