twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரேஸிங்,சேசிங் நிறைந்த "மட்டி" திரைப்படம் அமேசன் பிரைமில் ... அஜித் ஒரு முறையாவது பார்ப்பாரா?

    |

    சென்னை : அண்மையில் வெளியான 'மட்டி MUDDY 'திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.மட்டி 'திரைப்படம் அமேசன் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    ஊடகங்கள் நேர்நிலை விமர்சனங்கள் வெளியிட்டு வியப்பு தெரிவித்திருந்தன.புதிய படக் குழுவாக இருந்தாலும் அவர்களது பெரிய முயற்சியைப் பாராட்டி எழுதி இருந்தன.

    மண் சாலை கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான அந்த மட்டி தங்கள் சினிமா பாதையில் ஒரு ஆரம்பப் புள்ளி தான் என்கிறார் படத்தின் இயக்குநர் பிரகபல்.

    முதலாம் ஞானமே.. மூன்றாம் ஞாலமே.. இரண்டாம் தாயே.. பாக்கியராஜுக்கு குரு சிஷ்யன் பிறந்தநாள் வாழ்த்து!முதலாம் ஞானமே.. மூன்றாம் ஞாலமே.. இரண்டாம் தாயே.. பாக்கியராஜுக்கு குரு சிஷ்யன் பிறந்தநாள் வாழ்த்து!

    ஈடுபாடு உள்ள நடிகர்

    ஈடுபாடு உள்ள நடிகர்

    அவர் மேலும் பேசும்போது,"மட்டி" MUDDY திரைப்படம் எந்த நட்சத்திர பலமும் இல்லாமல் உழைப்பின் பலத்தை மட்டும் நம்பி உருவாகியிருந்தது.அதை உருவாக்கும் போது பல வரையறைகள் இருந்தன. பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தன. அதற்கு உட்பட்டுத் தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது.அதற்கு அஜித் சார் போன்று ரேஸிங் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒரு நடிகர் கிடைத்திருந்தால் அதன் உயரம் மேலும் பலநிலைகள் கூடியிருக்கும்.

    10 மொழிகளில்

    10 மொழிகளில்

    மட்டியின் இரண்டாம் பாகத்தை அஜித் சார் போன்ற பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து 10 மொழிகளில் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். மட்டி எங்களுக்கு ஒரு ஆரம்பம்தான். இதைவிட பிரமாண்டமாக, அழுத்தமுள்ள கதையில், ஆர்ப்பாட்டமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்பட முயற்சியாக 'மட்டி 'இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதன் கதையும் காட்சியமைப்புகளும் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகும் அளவிற்கு அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் இருக்கும்.

    அஜித் ஒரு முறையாவது

    அஜித் ஒரு முறையாவது

    இந்தியாவில் உருவாகும் ஹாலிவுட் படம் போல் அதை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழில் அஜித் சார் போல் பல மொழிகளிலுள்ள நட்த்திரங்களைச் சந்தித்து பேசும் திட்டத்தில் இருக்கிறோம்"

    என்றவர் 'மட்டி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இந்தியாவில் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.உலகின் 90 நாடுகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது ' என்கிற தகவலையும் கூறினார்.இந்த சாஹசம் நிறைந்த படத்தை நடிகர் அஜித் ஒரு முறையாவது பார்ப்பாரா ? அங்கீகாரம் அவரிடம் இருந்து கிடைக்குமா என்கிற ஏக்கத்துடன் இயக்குனர் காத்துகொண்டு இருக்கிறார்.

    ரெகுலர் பார்மெட் படங்களுக்கு நடுவில்

    ரெகுலர் பார்மெட் படங்களுக்கு நடுவில்

    ஜீப் ரேஸிங் ,கரடு முரடான பாதை என்று இந்த பாடத்தை பார்த்த பலரும் பல விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர் . இப்படி பட்ட படங்களை பொதுவாக மக்கள் தேர்ந்து எடுத்து பார்க்க வேண்டும். .வழக்கமான கமற்சியல் படங்களுக்கு நடுவில்,மாற்று சிந்தனையுடன் எடுக்கபடும் படங்கள் சரியான ப்ரமோஷன்ஸ் இல்லாமல் மக்களிடையே சென்று சேர்வது இல்லை. ஆதலால் பெரிய நடிகர்களின் பார்வை பட்டால், முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்தால் கடின முயற்சி கண்டிப்பாக பலன் கொடுக்கும் . (MUDDY) மட்டி பல உயரங்களை எட்டி நிச்சயம் சாதனை படைக்கும் என்று நம்புவோம்.

    English summary
    Muddy on Amazon Prime Director prabhagal Wish Ajith to Watch the Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X