Mufasa Box Office: இந்தியாவில் விடுதலை 2 வசூலை வீழ்த்திய முஃபாசா.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: இந்த வாரம் தமிழில் வெளியான விடுதலை 2 படத்தை ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான முஃபாசா முதல் நாள் வசூலில் முந்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், தமிழ் உள்ளிட்ட பலர் விடுதலை 2 படத்தில் நடித்துள்ளனர்.

2019ம் ஆண்டு வெளியான த லயன் கிங் திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 190 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது. ஆனால், அதன் ப்ரீக்வெல் படமாக வெளியாகி உள்ள முஃபாசா திரைப்படம் ஹாலிவுட்டில் சோனிக் ஹெட்ஜ்ஹாக் 3 படத்துடன் போட்டிப் போட்ட நிலையில், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியிருக்கிறது.

mufasa mufasa box office

இந்தியாவில் மிகப்பெரிய வசூலை முதல் நாளிலேயே முஃபாசா பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணமே ஷாருக்கான் மற்றும் மகேஷ் பாபு தான் என்கின்றனர். தமிழில் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் வாய்ஸ் கொடுத்திருந்தாலும் டாப் நடிகர் ஒருவர் குரல் கொடுத்திருந்தால் இன்னமும் வசூல் வந்திருக்கும் என்கின்றனர்.

விடுதலை 2 முதல் நாள் வசூல்: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி நடிப்பில் நேற்று வெளியான விடுதலை 2 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விமர்சகர்கள் படத்தை பாராட்டினாலும் பொதுமக்கள் இடையே படம் பெரிதாக கவரவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களின் தாக்கமும் இந்த படத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். முதல் நாளில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 6.6 கோடி ரூபாய் வசூல் செய்த விடுதலை 2 இந்தியளவில் மொத்தமாக 7 கோடி ரூபாயும் உலகளவில் ஒட்டுமொத்தமாகவே 8 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

முஃபாசா முதல் நாள் வசூல்: த லயன் கிங் படத்தின் ப்ரீக்வெலாக வெளியான முஃபாசா படத்துக்கு தமிழ்நாட்டில் போதுமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல தமிழ் படங்களே இந்த ஆண்டு முதல் நாளில் 1 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத நிலையில், முஃபாசா 1 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டில் ஈட்டியுள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபு முஃபாசா சிங்கத்துக்கு குரல் கொடுத்த நிலையில், 2 கோடி ரூபாய் வசூலை தெலுங்கு வெர்ஷன் பெற்றுள்ளது. இந்தியில் ஷாருக்கான் குரல் கொடுத்த நிலையில், 3 கோடி ரூபாய் வசூலும் ஒட்டுமொத்தமாக இந்தியளவில் ஆங்கில வெர்ஷன் 4 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 10 கோடி ரூபாய் வசூல் வேட்டையை முஃபாசா நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

வீக்கெண்டில் அதிகரிக்கும்: த லயன் கிங் திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக முஃபாசா திரைப்படம் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், உலகளவில் முஃபாசா திரைப்படம் 30 மில்லியன் டாலர்கள் தான் ஓபனிங் வசூலாக பெற்று இருப்பதாக கூறுகின்றனர். இந்த வார வீக்கெண்ட், கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறை என முஃபாசா படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

குறிப்பு: விடுதலை 2 மற்றும் முஃபாசா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த கணிப்புகள் மட்டும் தான் இவை. இது அதிகாரப்பூர்வ வசூல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X