Mufasa The Loin King: முஃபாஸா தி லயன் கிங் படத்தின் தமிழ் டப்பிங் வீடியோ.. வேற லெவல் போங்க!
சென்னை: தி லயன் கிங் படத்தின் அடுத்த பாகம் முஃபாஸா தி லயன் கிங் என்ற பெயரில் வரும் 20ஆம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தின் தமிழ் டப்பிங் பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தி லயன் கிங் படத்தில் முஃபாஸா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு படத்தில் இருந்த நேரம் என்பது குறைவுதான். அப்படி இருக்கும்போது, படத்தின் முதல் பாகத்தில் சிம்பா கதாபாத்திரத்தின் வளர்ச்சி, அதன் பின்னர் அது எப்படி தனது காட்டினை மீண்டும் அடைகின்றது என்பது குறித்துதான் இருந்தது. இது கடந்த பல தசாப்தங்களாக உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தி லயன் கிங் படம் வெளியானபோதே, ரசிகர்கள் உலகம் முழுவதும் ஆதரவு கொடுத்தனர். படத்தின் வசூல் டிஸ்னி எதிர்பார்த்ததைவிடவும் தாறுமாறாக அமைந்தது.

ஸ்கார்: அதுமட்டும் இல்லாமல், படத்தினை ஓடிடி தளத்தில் பல மில்லியன் நிமிடங்கள் பார்த்ததால், படத்தின் இரண்டாவது பாகத்தினை உருவாக்க படக்குழு முடிவு செய்தது. அதேநேரத்தில், முதல் பாகத்தில் இருந்து அட்டகாசமான வில்லனான ஸ்கார் ரசிகர்களை திரையில் தோன்றும்போது எல்லாம் பயமுறுத்தி வைத்திருந்தார் என்றுதான் கூறவேண்டும். ஸ்கார் கதாபாத்திரத்திற்கு முதல் பாகத்தில் தமிழில் அரவிந்த் சாமி அட்டகாசமாக குரல் கொடுத்தார்.

டப்பிங்: தற்போது வெளியாகவுள்ள முஃபாஸா தி லயன் கிங் படத்தில், கதாநாயகனான முஃபாசா கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்துள்ளார். படத்தில் வரும் டாக்கா கதாபாத்திரத்திற்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளார்.தி லயன் கிங் படம் மாபெரும் வெற்றி படமாக மாறியது. வரும் டிசம்பர் 20ஆம் தேதி முஃபாசா தி லயன் கிங் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது.தி லைன் கிங் படத்தில் குரல் கொடுத்திருந்த ரோபோ சங்கர் மற்றும் சிங்கம்புலி இந்தப் படத்திலும் குரல் கொடுத்துள்ளனர். இவர்கள் பும்பா மற்றும் டிமோனா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். கிரேஸ் கதாபாத்திரத்திற்கு நாசரும் ரஃபிக்கி கதாபாத்திரத்திற்கு விடிவி கணேஷும் குரல் கொடுத்துள்ளனர்.

வரவேற்பு: இவர்கள் டப்பிங் கொடுத்தபோது எடுத்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. அதாவது இவர்கள் டப்பிங் கொடுத்த வீடியோவே படத்தின் மற்றொரு ட்ரைலராக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக டப்பிங் கொடுக்கும்போது, நடிகர்களின் முகபாவனை ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











