வில்லனுடன் காதல்.. 14 வயது வித்தியாசம்.. காதல் என்ன வயசு பார்த்தா வருது? பிரபல நடிகை கேள்வி!
மும்பை: காதல், வயதைப் பார்த்து வருவதில்லை என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் ராகுல் தேவ். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
விஜயகாந்த் நடித்த நரசிம்மா படம் மூலம் தமிழில் கவனிக்கப்பட்ட ராகுல் தேவ் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அஜித்தின் வேதாளம்
அர்ஜூனின் பரசுராம், ஜெயம் ரவியின் மழை, லாரன்ஸின் முனி, சூர்யாவின் ஆதவன், அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2, விக்ரமின், 10 எண்றதுக்குள்ள, அஜித்தின் வேதாளம் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவரது மனைவி ரினா. கடந்த 2009 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கிறார்.

முக்தா கோட்சே
மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராகுல் தேவ், கடந்த சில வருடங்களாக இந்தி நடிகை முக்தா கோட்சேவுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். முக்தா, தமிழில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமியின் காதலி ஷில்பாவாக நடித்திருந்தார். இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கண்டதும் காதல்
இவரும் ராகுல் தேவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவருக்குமான வயது வித்தியாசம் 14 வருடங்கள். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் காதலை ஒப்புக் கொண்டுள்ள ராகுல் தேவ், எங்கள் காதல், மறைந்த என் மனைவியின் குடும்பத்துக்கும் தெரியும். இது கண்டதும் ஏற்பட்ட காதல் அல்ல' என்று கூறியிருந்தார்.

வயது வித்தியாசம்
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இருவருக்குமான வயது வித்தியாசம் பற்றி நடிகை முக்தா கோட்சேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காதல் வயதைப் பார்த்து வரவில்லை. காதல் என்பது ஷாப்பிங் செய்வது போல் அல்ல. அந்த சிவப்பு பேக்தான் வேண்டும் என்று கேட்பதை போல காதலைக் கேட்க முடியாது.

முதன் முதலாக
அது நம்மால் உணரப்படுவது. காதல் வந்தபிறகு அதற்குள் எல்லாமே அடங்கி விடுகிறது. அது எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. நாங்கள் முதன்முதலாக சந்தித்தது ஜூலை 3 ஆம் தேதி. அந்த நாளை கொண்டாடுகிறோம். அதன் பிறகு அதைப் பற்றி நினைப்பதில்லை.

தடுக்க முடியாது
பாலிவுட்டில், பேஷன் என்ற படம் மூலம் நடிகையானேன். நீங்கள் உங்களை முழுமையாக நம்பினால், பாலிவுட்டில் நிச்சயம் வளர முடியும். நீங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இது எந்த துறைக்கும் பொருந்தும். இவ்வாறு தெரிவித்துள்ளார் முக்தா கோட்சே.


Click it and Unblock the Notifications











