என்ன பேசினோம்னு கூட தெரியாதா.. நல்லா வருவப்பா முகென்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முகென் நேற்று ஒரே நாளில் மொத்த பெயரையும் இழந்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முகென், ஆரம்பத்தில் நியூட்ரெலாக இருப்பது போல் தெரிந்தது. இதனால் மக்களிடம் ஓரளவுக்கு நன்மதிப்பை பெற்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மீராவும் முகெனும் லிவிங் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மீரா நீ எல்லோரிடமும் பேசு அதில் நான் குறுக்கிட மாட்டேன் என்றார்.

பற்ற வைத்த சாக்ஷி
ஆனால் இதனை அரைகுறையாக ஒட்டுக்கேட்ட சாக்ஷி, மீரா முகெனை அபியிடம் பேசக்கூடாது என கூறுகிறார், உன் நல்லதுக்காகதான் சொல்கிறேன் என்றெல்லாம் முகெனிடம் மீரா கூறினார் என்று பற்றவைத்தார்.

முதலில் மறுத்த முகென்
சாக்ஷி பற்ற வைத்த நெருப்பு நேற்று பிக்பாஸ் வீட்டில் பற்றிக்கொண்டு எரிந்தது. உடனடியாக வனிதா முகெனிடம் சென்று உன்னை அபியிடம் பேசக்கூடாது என்று மீரா கூறினாரா என்று கேட்க, அப்படி கூறவே இல்லை என்று முதலில் கூறுகிறார் முகென்.

முகெனையே மாற்றிய சாக்ஷி
அப்படியா என்றபடியே உனக்கு யார் சொன்னது என்று சாக்ஷியிடம் கேட்டார் வனிதா. அப்போது நான்தான் கேட்டேனே, அவள் உன்னிடம் உன் நல்லதுக்குதான் சொல்கிறேன் அவர்களிடம் பேசாதே என்று மறைமுகமாக கூறினால் அல்லவா என்றார் சாக்ஷி.

பேக்கடித்த முகென்
ஓ அப்படியா என்று பேக்கடித்த முகென், மீராவிடம் நீ என்னை அபியிடம் பேசாதே என்று கூறினாயா என கேட்க இல்லை, அபியின் பெயரை கூட நான் சொல்லவில்லை என்று கூறுகிறார் மீரா. பின்னர் அவர்கள் நீ என்னிடம் அப்படி சொன்னதாக கூறுகிறார்கள் அவர்களிடம் வந்து சொல் என அழைத்தார் முகென்.

கத்திய முகென்
இதனால் கோபப்பட்ட மீரா, நான் பேசினது உனக்கு தெரியும் நீயே சொல், இது சிறுபிள்ளை தனமாக உள்ளது, இந்த பஞ்சாயத்துக்கு எல்லாம் நான் ஆள் இல்லை என்றார். உடனே மீராவை நோக்கி அடிப்பது போல் கத்தினார் முகென்.

அபியுடன் சேர்ந்த முகென்
பின்னர் வீட்டில் எல்லோரும் இருக்கும் போது என்னை அபிராமியோ அல்லது அவரது கேங்கோ யாரிடமும் பேசக்கூடாது என எப்போதும் கூறவில்லை என விளக்கம் கொடுத்தார். ஆனால் மீராவோ அல்லது மதுமிதாவோ அப்படி கூறவில்லை என முகென் விளக்கம் கொடுக்கவில்லை.

பிரைன் வாஷ் செய்யப்பட்ட முகென்
சேரன் அழைத்தபோது கூட செல்லாமல், வனிதா, அபிராமி, சாக்ஷி, ஷெரின் என அந்த கேங்கோட ஐக்கியமாகிவிட்டார் முகென். ஒரு வழியாக முகெனை பிரைன் வாஷ் செய்து அவர்களின் பக்கம் சேர்த்துக்கொண்டனர் வனிதா அன்ட் கோ.
கடுமையாக விமர்சனம்
முதலில் மீரா சொன்னதாக கூறப்பட்ட விஷயம் நேற்று மதுமிதா கூறியதாக வந்து முடிந்தது. பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது அப்போதும் முகென் வாயை திறக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
முகென் ராவ் எனது மரியாதையை இழந்துவிட்டார். மீராக்கிட்ட குரைத்ததற்கு பதில் அந்த ரவுடி கும்பலிடம் சொல்லியிருக்கலாம். என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











