வீட்டுக்காரன தேடுறீயா? இல்ல வேலைக்காரன தேடுறீயா? அபிராமியை நறுக்குன்னு கேட்ட மகராசன்.. முகென்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி தனக்கு வரவேண்டிய கணவரின் தகுதிகள் குறித்து பேசியது ஹவுஸ் மேட்ஸை மட்டுமல்ல ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் எரிச்சலாக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலங்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் அபிராமிதான். உடுத்தும் ஆடைகள் நடந்துகொள்ளும் விதம், பார்க்கும் பார்வை என எல்லாமே பிலோதான்.
ஓவியா போல் நடந்துக்கொள்வதாக கூறி ஓவர் ஆக்ட் செய்கிறார். குட்டி ட்ரவுசரை போட்டுக்கொண்டு அவர் நடக்கும் நடை, கவினிடம் அவர் பேசும் முறை எல்லாமே காப்பி, எரிச்சல் மூட்டுகிறது.

ஓவரோ ஓவர் ஆக்ட்
இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கின் போது ரேஷ்மாவும் மோகன் வைத்யாவும் அவ்வளவு சென்டிமென்ட்டாக பேசி அனைவரையும் அழ வைத்தனர். ஆனால் அபிராமி பேசும் போது எந்த சுவடுமே இல்லாமல் ஓவரோ ஓவர் ஆக்ட் செய்து பேசினார்.

தகுதிகளை பட்டியலிட்ட அபி
தனக்கு வரவேண்டி கணவன் குறித்து பேசிய அபிராமி, கணவராக வரவேண்டியவருக்கான தகுதிகளை பட்டியலிட்டார். அதாவது, கணவருக்கு நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் எனக்கு சமைக்க தெரியாது, சாப்பிடதான் தெரியும், என்னை பார்த்தாலே அது தெரியும் என தனது உடம்பபை காட்டினார் அபிராமி.

50 லட்சம் சம்பாதிக்கனும்
பின்னர் தான் துணி துவைக்க மாட்டேன், வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்துவிடுவேன், அவன்தான் துணி துவைக்க வேண்டும் என்றார். மேலும் மாதம் 50 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றும் கூறி ஸ்டைல் என நினைத்து மோசமான பாடி லாங்குவெஜை வெளிப்படுத்தினார்.

வேலைக்காரனை தேடுகிறாயா?
இதனைக் கேட்ட முகென் நீ வீட்டுக்காரனை தேடுகிறாயா அல்லது வேலைக்காரனை தேடுகிறாயா என்று கேட்டார். அதற்கு வீட்டுக்காரன்தான் எந்த வேலைக்காரன் 50 லட்சம் சம்பாதிக்கிறான் என சாக்ஷி திருப்பிக்கேட்டார்.

கவின் அல்ரெடி ரிஜக்டட்
அப்போது கவின் அவ்வளவுதானா என சக ஹவுஸ் மேட்ஸ் கேள்வி எழுப்பினர். அதற்கு கவின் அல்ரெடி ரிஜக்டட் என்றார் அபிராமி.


Click it and Unblock the Notifications











