பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?

சென்னை: கடந்த சீசன் வெற்றியாளர்கள் எல்லாம் கடலை சாப்பிட்டுக்கிட்டே வின் பண்ணிட்டாங்கன்னு பாலா பேசியது தான் ஞாபகத்துக்கு வருது..

பிக் பாஸ் தமிழ் 3 டைட்டில் வின்னரான முகேன் ராவ் இந்த சீசனில் எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் கோப்பையை காட்டும் காட்சி லீக்காகி வைரலாகி வருகிறது.

முன்னதாக பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வானவர்களை வாழ்த்தி முகேன் ராவ் போட்ட வீடியோ ஒன்று வைரலானது.

50 சதவீதம் ஓவர்

50 சதவீதம் ஓவர்

இந்த முறை முன்னதாக எதையும் கசியவிடக் கூடாது என நினைத்த பிக் பாஸ் குழு கடைசி நேரத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. நாளை 6 மணி நேரம் ஷோ என்பதால், முதல் 3 மணி நேரத்துக்கான எபிசோடை சனிக்கிழமையே ஷூட் செய்துவிட்டனர். நாளை காலை டைட்டில் வின்னர் யார் என்கிற அறிவிப்புக்கான ஷூட்டிங் நடைபெற உள்ளது.

லீக்கான கிராண்ட் ஃபினாலே ஸ்டில்

இந்நிலையில், பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் சிறப்பு அழைப்பாளராக போன சீசன் டைட்டில் வின்னரான முகேன் ராவ் வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சீசனில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வரும் அவர் சனம் ஷெட்டியிடம் டைட்டில் வின்னர் கோப்பையை காட்டும் புகைப்படமே கசிந்து விட்டது.

ஐவருக்கும் வாழ்த்து

முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேன் ராவ் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், சோமசேகர் மற்றும் ஆரி என அனைவரது தனித் திறமைகளை பற்றியும் அடுக்கி பேசிவிட்டு, அவர்கள் வெற்றிப்பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து வீடியோ போட்டது வைரலாகி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆரி தான் அதிக ஓட்டுக்கள் பெற்று டைட்டில் வின் பண்ணிட்டார் என்றே தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியில் கமல் அதை அறிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இறுதி நேர ஆச்சர்யங்கள் ஏதாவது இருக்குமா? ரன்னர் அப் யாருக்கு கிடைக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

சோமசேகர் வெளியேற்றம்

சோமசேகர் வெளியேற்றம்

மேலும், தற்போது எடுத்துள்ள பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே ஷூட்டில் முதல் ஆளாக சோமசேகர் குறைவான ஓட்டுக்களுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். டிக்கெட் டு ஃபினாலேவை வென்ற சோமசேகர் வெளியேறி விட்டார் என்றும் தகவல்கள் வந்துள்ளன. நாளைக்கு ஷோவை என்ஜாய் பண்ணுவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X