Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தூக்கம் கூட தூக்கில் தொங்குதே.. காதலியுடன் ரொமான்ஸ் பண்ணும் முகேன் ராவ்.. புது ஆல்பம் தெறிக்குது!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் டைட்டில் வின்னரான முகேன் ராவ் தனது காதலியுடன் ஜாலியாக சுற்றும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
மேலும், தேடினேன் என்கிற டைட்டிலில் அவர் பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடல் ஒன்றும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிலேயே முகேன் ராவ் கம்போஸ் பண்ணி பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஆரஞ்சு பழத்தை வச்சு கண்ணுல அடிச்சிட்டாங்க.. கடுப்பான ஆரி.. கண்டுக்காம அவுட்டாக்கிய பிக் பாஸ்!
மலேசியா பாய்
1995ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவில் இருந்து இவரும், இலங்கையில் இருந்து லாஸ்லியாவும் புதிய வரவாக வந்தனர். ஆனால், இந்த முறை எல்லாருமே லோக்கல் கய்ஸ் தான் என்பது போல நிகழ்ச்சி நகர்கிறது.
பிக் பாஸ் வின்னர்
போன சீசனில் நடிகை லாஸ்லியாவா? தர்ஷனா? சாண்டி மாஸ்டரா? முகேன் ராவா? யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், சத்தியமா நான் சொல்லுறேன்டி என பாடி கலக்கிய முகேன் ராவ் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 டைட்டில் வின் பண்ணி ஜெயித்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
நேற்று முகேன் ராவின் 25வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் முகேன் ராவின் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து மழையாக பொழிந்து தள்ளினர். தனது ரசிகர்களுக்கு ஒரு சின்ன ட்ரீட் கொடுக்க நினைத்த முகேன் ராவ், புதிய ஆல்பம் பாடலை வெளியிட உள்ள அறிவிப்பை வெளியிட்டார்.
ஆல்பம் சாங்
இந்நிலையில் பிறந்த நாள் பரிசாக தனது ரசிகர்களுக்கு அறிவித்தபடியே, தற்போது "தேடினேன்" ஆல்பம் பாடலின் டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முகேன் ராவ். சத்தியமா நான் சொல்லுறேன் டி என்கிற அவரது அந்த ஆல்பம் பாடலே மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இந்த பாடல் மேலும் வரவேற்பை அள்ளும் என்றே தெரிகிறது.
View this post on InstagramA post shared by MUGEN RAO (@themugenrao) on
தூக்கம் கூட தூக்கில் தொங்குதே
கனவு.. கனவு.. கனவு.. கரைந்து போனதேனடி.. நினைவும் நரம்பும் சதையும் பின்னியது என செம ரொமாண்டிக்காவும் காதல் வலியுடனும் பாடலை போட்டு பாடியுள்ளார் முகேன் ராவ். அதிலும் கடைசியில் வரும் தூக்கம் கூட தூக்கில் தொங்குதே என பாடி அசத்தியுள்ளார்.
காதலியுடன்
மேலும், நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான முகேன் ராவ் தனது காதலி யாஸ்மின் நதியாவுடன் எடுத்துக் கொண்ட மிரர் செல்பி புகைப்படமும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. போன முறை இருந்த போட்டியாளர்கள் போல இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்கள் இல்லை என்கிற வருத்தம் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.