பிக் பாஸ் முகேன் ராவ்-ன் வேலன் பாடல் பதிவு முடிந்தது!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அன்பை பெற்றவர் முகேன் ராவ்
இப்பொழுது தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் கவின் மூர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் வேலன் படத்தின் பாடல் பதிவு தற்போது முடிந்துள்ளதாக ஹேப்பியான நியூஸை தெரிவித்துள்ளார்.

ஹீரோவாக மாறினார்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன்களிலும் தனிச் சிறப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட முகேன் ராவ் மிகச் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அன்பை பெற்று ஹீரோவாக மாறினார். இன்டிபென்டன்ட் பாடகராக பல பாடல்களை பாடியுள்ள இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் ஏராளம்.

கவின் மூர்த்தி இயக்கத்தில்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வர அறிமுக இயக்குனர் கவின் மூர்த்தி இயக்கத்தில் வேலன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் நடிகர்கள் பிரபு,சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

பாடல் பதிவு ஓவர்
அடிக்கடி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்த முகேன் இப்போது அட்டகாசமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படத்தின் பாடல் பதிவு அனைத்தும் முடிந்துவிட்டது. பாடகி பிரியங்கா, குக் வித் கோமாளி சிவாங்கி, வேல் முருகன் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

படக்குழு எடுத்த புகைப்படத்தை
ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைமகன் முபாரக் இப்படத்தை தயாரித்து வருகிறார். பாடல் பதிவு செய்து முடித்த கையோடு பாடகர்கள் உடன் படக்குழு எடுத்த புகைப்படத்தை முகேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











