பிக்பாஸ் புகழ் முகேன் ராவின் ‘வேலன்‘… டீசர் வெளியானது !

சென்னை : பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நடிக்கும் வேலன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக முகேன் ராவ் நடிக்கிறார். அவருடன் சூரி, பிரபு,மரியா வின்சென்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கோபி சந்த் இசையமைத்துள்ளார், கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பிக் பாஸ் முகேன் ராவ்

பிக் பாஸ் முகேன் ராவ்

முகேன் ராவ் மலேசியாவை சேர்ந்த இசை கலைஞர் ஆவார். இவர் ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே முகேன் ராவ் பிரபலமடைந்தார். முகேன் ராவ் இண்டிபெண்டன்ஸ் மியூசிக் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

பிரபு முக்கிய ரோலில்

பிரபு முக்கிய ரோலில்

பிக்பாஸ் மூலம் கவனம் ஈர்த்த முகேன் ராவ் நடிக்கும் வேலன் படத்தை கவின் இயக்குகிறார். பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது.

வேலன் டீசர்

வேலன் டீசர்

சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று இத்திரைப்படம் டீசர் வெளியாகி இருக்கிறது. இதனை, சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படத்தை தயாரிக்கும் கலைமகன் இப்படத்தையும் தயாரித்துள்ளார்.

கிராம பின்னணி

கிராம பின்னணி

தற்போது வெளியாகி உள்ள டீசரில் பிரபு என் பையன் வேலனால் இந்த ஊரே தலை நிமிர்ந்து நிற்கபோகிறது என்று கூறுகிறார். கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களத்தில், ஆட்டம் பாட்டம், திருவிழா, காதல், சூரியின் நகைச்சுவை என டீசர் நிறைவாக உள்ளது.

வெற்றி

முகேன் ராவ் வெற்றி என்றப் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான வெப்பம் படத்தின் இயக்குநரும் கெளதம் மேனனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X