உழைக்காமல் ஓசி சோறு தின்கிற நடிகன்.. ஓவர் பில்டப் வெறியாகுது.. கடுப்பான பிரபலம்!
சென்னை: பாலிவுட்டாக இருக்கட்டும் அல்லது கோலிவுட்டாக இருக்கட்டும், பிரபலங்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. தயாரிப்பாளர்களும் பிரபலங்களின் மவுசுக்கு ஏற்றார் போல் அவர்களின் சம்பளத்தை கோடிகளில் கொடுக்கின்றனர். அதிலும் உச்ச நட்சத்திரங்கள் என்றால் அவர்களின் சம்பளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமூக ஆர்வலர் முகில் வீரப்பன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், காலை ஆறு மணிக்கு ஏர் பிடித்து கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிக்கு ஒரு நாள் சம்பளம் 400 ரூபாய், இந்த நாட்டுக்கே சோறு போடும் உழைப்பாளிக்கு வெறும் 400 ரூபாய் சம்பளம். ஆனால், உழைப்பால் ஏசியில் இருக்கும் நடிகர்களுக்கு லட்ச கணக்கில் சம்பளமா என்று கேள்வி எழுப்பினார்.

முகில் வீரப்பன் பேட்டி: அள்ளி அள்ளி சம்பளம் கொடுப்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், ஒன்று இரண்டு படத்தில் நடித்து விட்டு, ஒன்றுமே செய்யாமல் இருக்கும் இந்த நடிகர் கொடுக்கும் பில்டப்பை பார்த்தால் செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் போல இருக்கும். ஷூட்டிங்கில் இவர்கள் செய்யும் அலப்பறை பார்த்தால் வெறியாகிவிடும். அவர்களின் நிஜவாழ்க்கையை பார்த்தால், கேவலமானதாக அசிங்கமான தாக இருக்கும்.
ஓவர் பில்டப்: ஆனால், ஷூட்டிங்கில் அவர்கள் கொடுக்கும் பில்டப், நடந்து போகும்போது ஒரு பில்டப், இரண்டு காட்சி நடித்து முடித்ததும், முகம் துடைக்க துண்டு கொண்டு வந்து கொடுக்க ஒருத்தன், குடை பிடிக்க ஒருத்தன், சண்டையை மாட்டி விட ஒருத்தன் என எல்லாத்துக்கும் ஒருத்தரை வைத்துக்கொள்கிறார்கள், இவர்கள் கழிவறைக்கு சென்றால், கழுவி விட ஒரு ஆளை வைத்து இருக்கிறார்களா என்ன? அசிங்கம் இதெல்லாம்,இது போன்ற அடக்குமுறைகளை, இதுபோன்ற சனாதன முறைகளை தமிழ் சினிமாவில் இருந்து தூக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று பத்திரிக்கையாளர் முகிலன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications