திரிஷா வெளிநாட்டில் கும்மாளம் அடிச்சிட்டு சுத்துறாங்க? கொந்தளித்த பிரபலம்!

சென்னை: விடாமுயற்சி, தக் லைஃப் என அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, மொராக்கோவில் தனது ஆறு பெண் தோழிகளுடன் விடுமுறையை கழித்து வருகிறார். அந்த ஆறு தோழிகளில் ஒருவராக, கோட் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் இருக்கிறார். நடிகை த்ரிஷா இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் தற்போது வைரலாகி உள்ளது.

இதுகுறித்து, BBTCinema யூடியூப் சேனலுக்கு முகில் வீரப்பன் பேட்டி அளித்துள்ளார். அதில், ஒரு சுற்றுலா செல்வதற்கு எதற்கு இந்த ஆர்பாட்டம், இவ்வளவு விளம்பரம் எதற்கு. எதற்காக இந்த ஆறு பேரும் வெளிநாட்டுக்கு சென்றார்கள். மூன்றாம் உலக யுத்தத்திற்கு வரைபடம் வரைய சென்றார்களா? லெபனான் குண்டு வீச்சில் பச்சிளம் குழந்தைகள் குண்டு வீச்சால் செத்து மடிகிறார்களே அதை ஆராய்ச்சி செய்ய சென்றார்களா? தமிழ் ஈழத்தில் கொத்து கொத்தா செத்து மண்ணோடு மண்ணாகி போன எலும்பு கூடுகளை எண்ணுவதற்கு சென்றார்களா? எதற்கு வெளிநாடு சென்றார்கள், பணம் கொளுத்து கிடக்கிறது என்பதற்காக செய்யும் வேலை தான் இது. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று தமிழக அரசே சொல்லுகிறது அப்படி இருக்கும் போது, த்ரிஷா மது ஒழிப்ப விளம்பரத்திற்கு பயன்படுத்த வேண்டியது தானே. சுற்றுலா செல்வதை விளம்பரப்படுத்தும் த்ரிஷா, மது ஒழிப்பு விளம்பரத்தில் நடித்து நாட்டை காப்பாற்றக்கூடாதா?

trisha archana kalpathi moroco tour

வெளிநாட்டில் கும்மாளம்: ஆறு பேர் கூட்டாக சேர்ந்து கொண்டு வெளிநாட்டுக்கு டூர் போகவேண்டும் என்றால் எத்தனை கோடி செலவாகும். இவர்கள் சாதாரண அறையில் தங்குவார்களா? ஒரு ஆடம்பரமான ஓட்டலில் தங்குவார்கள் இதற்கு எத்தனை கோடி செலவாகும். கோட் படம் வெற்றி அடைந்துவிட்டது, பணத்தை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாததால், அதை வைத்து ஆறு பேரும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்கள். இவர்கள் இப்படி செய்வதை எளிய மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். கோடியில் புரளும் இதுபோன்ற குத்தாட்டகாரிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று அதை விளம்பரப்படுத்தி, ஏழை மக்களிடம் இது போன்ற ரசனையை பொருத்தி மழுங்கடிக்கும் வேலையைத்தான் நடிகைகள் செய்கிறார்கள். என் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வைத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறார்கள். அந்த வரி பணத்தை வைத்துக்கொண்டு கும்மாளம் அடிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

trisha archana kalpathi moroco tour

நடிகைகள் இப்படி இருக்கவேண்டும்: மறைக்கப்பட்ட வரலாறு , மறைக்கப்பட்ட கதை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை துணித்து பேசுபவராக நடிகைகள் இருக்க வேண்டும். கயல் ஆனந்தி என்ற நடிகை சாதியையும் மதத்தையும் என் குழந்தைக்கு திணிக்க மாட்டேன் என்று சொன்ன சரித்திர நடிகை. அவர்கள் இடத்தில் மற்ற நடிகைகள் என்று கற்றுக்கொள்ள வேண்டும். நடிகைகள் சமூகத்தை கற்றுக்கொள்ள வேண்டும், நடிகைகள் சமூகத்தில் நடக்கும் கொடுமைக்கு எதிராக போராட வேண்டும். இந்த தேசம் தலை தூக்குவதற்கு உதவியாக இருங்கள். இதுபோன்ற டூருக்கு சென்று கூத்தடித்துவிட்டு பணத்தை வீணாக்கிவிட்டு, மீண்டும் படம் எடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது என்று அந்த பேட்டியில் முகில் வீரப்பன் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X