twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பாக்கி விஜய் மாதிரி போஸ் கொடுத்த பிக் பாஸ் முகின் ராவ்!

    |

    சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் பெண்களின் கனவு நாயகனாக மாறியுள்ளார் முகின் ராவ்.

    Recommended Video

    Thuppakki Movie Screenplay breakdown | Rewind Review

    வேலன், வெற்றி என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    உங்கள் உயிர் போனாலும் உயிர்ப்புடன் இருக்கும் உங்கள் ஓவியங்கள்.. இளையராஜா மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!உங்கள் உயிர் போனாலும் உயிர்ப்புடன் இருக்கும் உங்கள் ஓவியங்கள்.. இளையராஜா மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!

    தமிழ் சினிமாவில் முகின்ராவ் பெரும் இடத்தை பிடிப்பார் என பலரும் எதிர்பார்க்கையில் இப்பொழுது துப்பாக்கி விஜய் மாதிரி ஸ்டன்னிங் லுக்கில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு இளம் பெண்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

    அங்கீகாரத்தை தேடி

    அங்கீகாரத்தை தேடி

    மலேசியாவில் வாழும் தமிழ் குடும்பத்தில் பிறந்த முகின் ராவ் பல்வேறு ஆல்பம் பாடல்களை பாடி அதற்கான அங்கீகாரத்தை யூடியூப் தளம் வழியாக தேடிக் கொண்டு இருந்தவர். பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி இப்பொழுது மலேசியாவின் அடையாளமாக மாறியுள்ளார். பாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட முகேன் ராவ் காதலே கண்ணீர் என்ற ஆல்பம்பாடலை 2014 ஆம் ஆண்டு பாடியிருந்தார் அதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி யூட்யூபில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார்.

    பிக் பாஸ் சீசன் 3

    பிக் பாஸ் சீசன் 3

    கவின், சாண்டி, தர்ஷன், முகின்ராவ், லாஸ்லியா என பிக் பாஸ் சீசன் 3ன் வெற்றிக்கு மிகப்பெரிய ஊன்றுகோலாக இவர்கள் இருக்க இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் பாடிய "சத்தியமா நான் சொல்லுறேன்டி" ஆல்பம் பாடல் அனைவரையும் முணுமுணுக்க வைத்து அந்த ஆண்டின் மிகச் சிறந்த பாடலாக கொண்டாடப்பட்டது. பிக்பாஸ் மூலமாக இப்பொழுது தமிழ் பெண்களின் கனவு கண்ணனாக முகின்ராவ் வலம் வருகிறார்.

    அடுத்தடுத்து இரண்டு படங்களில்

    அடுத்தடுத்து இரண்டு படங்களில்

    வெப்பம் பட இயக்குனரின் இயக்கத்தில் உருவாகிவரும் வெற்றி-யில் முகேன் ராவ் ஹீரோவாக நடித்து தமிழில் அறிமுகமாக இதில் இவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து புதுமுக இயக்குனர் கவின் இயக்கும் வேலன் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் பிரபு, சூரி என மிகப் பெரிய பட்டாளமே நடிக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

    மாஸாக போஸ்

    மாஸாக போஸ்

    தமிழ் சினிமாவில் மிக விரைவிலேயே உயரிய நிலையை எட்ட இருக்கும் முகின் ராவ்வை ரசிகர்கள் பலரும் பெரிய திரையில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க துப்பாக்கி விஜய் ஸ்டைலில் செம மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு கை பார்த்து வைரலாகி வர பெண் ரசிகைகள் இவரை வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.

    Read more about: thuppakki vijay
    English summary
    Mugin Rao has released some Thuppakki Vijay style photos in his SM.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X