சவுந்தர்யா, விசாகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி, நீதா
Recommended Video

சென்னை: சவுந்தர்யா, விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
சவுந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடந்தது.

முகேஷ் அம்பானி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழில் அதிபரான முகேஷ் அம்பானியும், அவரின் மனைவி நீதாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக அம்பானி மகள் திருமணத்தில் ரஜினி தன் மனைவியுடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜோல்
சவுந்தர்யா இயக்கிய விஐபி 2 படத்தில் தனுஷுக்கு வில்லியாக நடித்த பாலிவுட் நடிகை கஜோலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

தனுஷ்
ஒரு வழியாக தனுஷ் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. தான் அசுரன் பட கெட்டப்பில் இருப்பதால் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்காமல் ஒதுங்கியே இருந்தார் தனுஷ்.

டிடி
சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடியும், த்ரிஷாவின் நண்பர் சிட்னியும் கலந்து கொண்டனர்.
புன்னகை
திருமண நிகழ்ச்சியின்போதும் சரி, வரவேற்பு நிகழ்ச்சியின்போதும் சரி சவுந்தர்யா மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அதை பார்த்து ரஜினி ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











