twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''ரொம்ப ஹாட், ஏர் கூலர் பயன்படுத்திய பீஷ்மர்' அதைக் கவனிச்சிருக்கணும்..உண்மையை ஒப்புக்கொண்ட நடிகர்!

    By
    |

    சென்னை: மாகாபாரத செட்டில் ஏர் கூலர் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று நடிகர் முகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.

    கொரோனாவால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூா்தா்ஷனில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்களை மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த தொடா்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

     சிரஞ்சீவி மடி மேல் உட்கார்ந்து கொண்டு.. குதித்து குதித்து டான்ஸ்.. சூப்பர் பேத்தி! சிரஞ்சீவி மடி மேல் உட்கார்ந்து கொண்டு.. குதித்து குதித்து டான்ஸ்.. சூப்பர் பேத்தி!

    மகாபாதரம்

    மகாபாதரம்

    ராமாயணம் தொடா், தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டிலும், மகாபாரதம் தொடா் கடந்த 1988-ஆம் ஆண்டிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து ராமானந்த சாகரின், ஸ்ரீகிருஷ்ணா மீண்டும் ஒளிபரப்பப்படும் என தூா்தா்ஷன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில், நிதிஷ் பரத்வாஜ் கிருஷ்ணராகவும் முகேஷ் கண்ணா பீஷ்மராக நடித்திருந்தனர்.

    தூணில் ஏர் கூலர்

    தூணில் ஏர் கூலர்

    பி.ஆர்.சோப்ரா இயக்கி தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்போது மறு ஒளிபரபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்ததொடர் பற்றி சில மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. எல்லாவற்றையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ் இந்த தொடரையும் விடவில்லை. தொடரின் ஒரு காட்சியில், பீஷ்மராக நடித்திருக்கும் முகேஷ் கண்ணா நிற்க, அவருக்கு பின்னால் இருக்கும் தூணில் ஏர் கூலர் வைக்கப்பட்டுள்ளது.

    இதுதான் ஆதாரம்

    இதுதான் ஆதாரம்

    'பீஷ்மர் அப்பவே ஏர் கூலர் பயன்படுத்தி இருக்காரே.. இதுதான் ஆதாரம்' என்று சிலர் அந்த போட்டோவை பதிவிட்டனர். சிலர் அது ஏர்கூலர் இல்லை, தூண் டிசைன் என்று மறுத்தனர். அதற்கும் போட்டோ ஆதாரம் காட்டிய நெட்டிசன்ஸ், இந்தாங்க நல்லா பாருங்க என்று கூறினர். இதையடுத்து இதுபற்றி காரசார விவாதம் நடந்தது.

    முகேஷ் கண்ணா

    முகேஷ் கண்ணா

    இதை வைத்து சமூக வலைத் தளங்களில் சிலர் கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார், அந்த தொடரில் பீஷ்மராக நடித்துள்ள முகேஷ் கண்ணா. அவர் கூறும்போது, இந்த வைரல் மீம்ஸ் என் கவனத்துக்கும் வந்தது. இந்தப் புகைப்படம் அந்த தொடரின் காட்சியில் இருந்துதான் எடுக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

    உண்மைதான்

    உண்மைதான்

    அப்படி இருந்தால், அது பெரிய தவறுதான். பி.ஆர்.சோப்ரா தரப்பில் இருந்து இதுபோன்ற வெளிப்படையான தவறு நடந்திருக்கும் என்று நினைக்கவில்லை. இந்த தொடரின் எடிட்டிங்கிலும் உருவாக்கத்திலும் மிகவும் கவனமாக அவர் இருந்தார்' என்ற முகேஷ் கண்ணா, செட்டில் ஏசி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்றும் கூறியுள்ளார்.

    அதிக வியர்வை

    அதிக வியர்வை

    'மகாபாரத தொடரின் படப்பிடிப்பு, மும்பை பிலிம் சிட்டியில் நடந்தது. ஏசி செட்தான் அமைக்கப்பட்டிருந்தது. கடினமான உடைகள், நீண்ட தாடியுடன் நான் இருந்ததால் எப்போதும் சூடாகவே உணர்வேன். ஷாட் முடிந்ததும் அதிக வியர்வையுடன் வந்து உட்கார்வேன். இது எரிச்சலடைய வைத்ததால், ஏர் கூலர் வேண்டும் என்று பி.ஆர்.சோப்ராவிடம் கேட்டேன். ஏற்பாடு செய்தார்' என்று கூறியுள்ளார்.

    English summary
    Mukesh Khanna reacts to ‘cooler’ in Mahabharat, says BR Chopra would not make ‘such a glaring mistake
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X