இதோ திரிஷ்யம் 2 .. கன்னடத்துக்கும் போகிறது.. ஹீரோ அதே ரவிச்சந்திரன்!
பெங்களூரு : மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட் ஆன படம் த்ரிஷ்யம். இதன் இரண்டாம் பாகமும் சமீபத்தில் ரிலீசாகி பிளாக்பஸ்டர் படமாகி உள்ளது. இந்த இரண்டு பாகங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.
த்ரிஷ்யம் 2 நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரிலீசானது. இதுவும் சூப்பர்ஹிட் ஆனது. கன்னடத்தில் த்ரிஷ்யம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் மலையாளத்தில் த்ரிஷியம் 3 தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழிலும் பாபநாசம் 2 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் இயக்கும் த்ரிஷ்யம் 2
இந்நிலையில் கன்னடத்தில் த்ரிஷ்யம் 2 அதே பெயரிலேயே ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை ரவிச்சந்திராவுடன் இணைந்து டைரக்டர் பி.வாசுவும் இயக்க உள்ளார். த்ரிஷ்யம் முதல் பாகத்தையும் இவர்கள் இருவரும் இணைந்து தான் இயக்கினர்.

யுகாதியில் அறிவிப்பு
கன்னட ரீமேக்கை ஈ4 என்டர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு, யுகாதி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. 2014 ல் வெளியான த்ரிஷ்யம் முதல் பாகத்தையும் ஈ 4 என்டர்டைன்மென்ட் தான் தயாரித்தது.

புதிதாக இணையும் நடிகர்கள்
த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்திலும் நவ்யா நாயர், ஆரோஹி நாராயணன், உன்னடி, ஆஷா சரத், பிரபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் பிரமோத் ஷெட்டியும் புதிதாக இணைந்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது.
உரிமம் பெற்ற முகேஷ் மேத்தா
ஸ்ரீதரன் ஜிஎஸ்வி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த படத்தை முகேஷ் ஆர் மேத்தா மற்றும் சிவி சாரதி இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் வேலைகள் மே மாதம் துவங்கப்பட உள்ளது. த்ரிஷ்யம் 2 கன்னட ரீமேக் உரிமத்தை அளித்ததற்கு ஜீத்து ஜோசப் மற்றும் ஆன்டனி பெரும்பவூருக்கு முகேஷ் ஆர் மேத்தா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











