மெர்சலுக்கே இப்படி மிரள்றாங்களே... இன்னும் முக்கபாஸ் பாத்தா என்ன ஆவாங்களோ!!
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் முக்கபாஸ் இந்திப் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது.
படம் துவங்குவதே இந்துத்வா கோஷ்டியின் அட்டூழியத்தில் இருந்துதான். ஒரு தலித் பாக்ஸர் மீது ஏவப்படும் சாதி ரீதியிலான அடக்குமுறைகளை மீறி தன் கனவை அடைகிறானா இல்லையா என்பதை சொல்வதுதான் முக்கபாஸ் கதை.

லைவ்வான மேக்கிங்கில் தான் ஒரு கிங் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் அனுராக். படத்தை பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் முக்கியமானவை வசனங்கள். 'நான் பிராமின். கெஞ்ச மாட்டேன்' என்ற வசனம் முதல், 'தான் ஒரு தலித் என்பதற்காக எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்படுகிறேன் என்று பாக்ஸிங் கோச் விளக்குவது என்று படம் முழுக்கவே தேசத்தின் இன்றைய நிலையை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் அனுராக்.
மெர்சலுக்கே இந்த பாடு படும் காவிகள், முக்கபாஸ் படம் வரும்போது புழுங்கியே செத்துவிடுவார்கள். படத்தைக் காண நவம்பர் 10 வரை காத்திருங்கள்!

காவி பயங்கரவாதம் இன்று நம் படுக்கையறை வரை வந்துவிட்டது. இதற்கு வலுவான எதிர்ப்பு காட்ட அனுராக் போன்ற படைப்பாளிகள் அவசியம். ஒரு கலகக்காரனின் படைப்பு கலகத்தை உண்டாக்கவில்லையென்றால் அந்த படைப்புக்கோ படைப்பாளிக்கோ பார்வையாளனுக்கோ எந்த பயனும் இல்லை என்று நம்புபவன் நான். அனுராக் என்னும் துணிச்சலான கலகக்காரனுக்கு பூங்கொத்து!
- ராஜிவ்


Click it and Unblock the Notifications











