twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 மொழிகளில் வெளியாக உள்ள 'அம்மா' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா?

    By Veera Kumar
    |

    பெங்களூர்: 'அம்மா' என்ற பெயருடன் கன்னட தயாரிப்பாளரால், ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்தது என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. படத்தின் நாயகி ராகினி திவேதி கொடுத்துள்ள போஸ்களும், படத்தின் டீசரில் வரும் காட்சிகளும் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளன.

    தமிழில் உட்பட 5 மொழிகளில் 'அம்மா'

    தமிழில் உட்பட 5 மொழிகளில் 'அம்மா'

    கன்னட தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகர் தயாரிப்பில், பைசல் சையிப் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'அம்மா'. இந்த படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அம்மா திரைப்படம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கிசுகிசு கன்னட திரைப்பட துறை வட்டாரத்தில் சுற்றிவருகிறது.

    பட ஸ்டில்களால் சந்தேகம்

    பட ஸ்டில்களால் சந்தேகம்

    கன்னடத்தில் முன்னணி நாயகியாக இருப்பவர் ராகினி திவேதி. இவர்தான், 'அம்மா' திரைப்படத்தின் ஹீரோயின். இது ஹீரோயின் சார்ந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. 'அம்மா' திரைப்படத்தில் ராகினி திவேதி கொடுத்த போஸ்களை பட யூனிட் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களை பார்க்கும்போதும், தமிழக முதல்வர் குறித்த படமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

    இரட்டை விரலை காண்பிக்கிறார்

    இரட்டை விரலை காண்பிக்கிறார்

    ராகினி திவேதியின் மூன்றுவகையான படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போட்டோவில் மிகவும் கவர்ச்சியாக காணப்படும் ராகினி திவேதி மற்றொரு போட்டோவில், சேலை கட்டிக்கொண்டு அரசியல்வாதி போல காணப்படுவதுடன், வெற்றிச் சின்னமான இரட்டை விரலை தூக்கி காண்பித்தபடி காட்சியளிக்கிறார். மற்றொரு போட்டோவில், ரஃப் அன்ட் டப்பாக ராகினி திவேதி காணப்படுகிறார். ராகினி ஒரு ஆக்ஷன் நடிகை என்பதால் அதுபோன்ற காட்சிகளும் படத்தில் இருக்கும் என்பது மூன்றாவது போட்டோவில் இருந்து தெரியவருகிறது.

    டீசரில் பொதுக்கூட்டம், பெண்ணின் கதை..

    டீசரில் பொதுக்கூட்டம், பெண்ணின் கதை..

    இதனிடையே படத்தின் டீசரும் இது ஒரு அரசியல் சார்ந்த திரைப்படம் என்பதை காண்பிப்பதாக உள்ளது. டீசருக்கு நடுவே, ஒரு பெண்ணின் கதையை பாருங்கள் என்றும், யார் இந்த நடைமுறையை மாற்றுவார்கள் என்றும் ஆங்கிலத்தில் வாசகங்கள் காண்பிக்கப்படுகின்றன. மேலும், பொது மேடைக்கு எதிரே பெரும் திரளாக மக்கள் குழுமி இருப்பது போலவும் காட்சிகள் வருகின்றன.

    இல்லவே இல்லை..

    இல்லவே இல்லை..

    இதுகுறித்து ராகினி திவேதி கூறுகையில், "இது ஜெயலலிதா வாழ்க்கை குறித்த கதை இல்லை" என்றார். தயாரிப்பாளர் மனோகர் கூறுகையில் "இயக்குநர் பைசல் சையிப், மும்பையில் பத்திரிகையாளராக பணியாற்றுபவர். சினிமா விமர்சனங்களும் எழுதுகிறார். 'அம்மா' திரைப்படத்தின் ஒன்லைன் கதையை கேட்டதுமே எனக்கு பிடித்துவிட்டது. எனவேதான் ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளோம். படக்குழுவிற்கு ஜெயலலிதா ஒரு இன்ஸ்ப்ரேஷன். மற்றபடி கதை அவரை பற்றியது கிடையாது. பெண்ணுக்குள் இருக்கும் சக்தி வடிவத்தைதான் படத்தில் காண்பிக்கிறோம்" என்றார்.

    English summary
    As director Faisal Saif gets ready to go on the floors with Amma, the film that stars Ragini Dwivedi, it’s learnt that Bollywood comedian Rajpal Yadav will play the antagonist in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X