twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்!

    |

    சென்னை: இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், என பல முகங்களைக் கொண்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஐம்பது வயது ஆகிவிட்டது என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இன்று அவருடைய ஐம்பதாவது பிறந்தநாள்!

    நவ நாகரிக பாக்கியராஜ் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா பாக்கியராஜ் படங்களையே மிஞ்சும் அளவுக்கு கிளுகிளுப்பூட்டியவர் என்றால் மிகையாகாது. ஆனால் அதுக்கெல்லாம் விதை யார் போட்டது என்று சிவாஜி ஸ்டைலில் கேட்டால்... அதுவும் பாக்கியராஜ்தான்

    லயோலா கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு நடிகராகவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியபோது மிகவும் கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடியிருக்கிறார். உணவகங்களில் வெயிட்டராக பணியாற்றிக் கொண்டேதான் தன் சினிமா வாழ்க்கையை தேடிக் கொண்டார்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    முதன் முதலில் உதவிக்காக சேர்த்துக் கொண்டவர் பாக்யராஜ் தான். (அந்த சமாச்சார டச்சுக்கான காரணம் புரியுதா) பிறகு இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக சேர்ந்து ஆசை திரைப்படத்தில் பணியாற்றினார். உல்லாசம் படத்தில் வேலை செய்யும்போது தான் அஜித்திடன் கதை சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

    குஷி

    குஷி

    தல அஜித்தின் மாஸ் ஹிட்டான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதல் படம் தல, அடுத்த படமே தளபதி என்று மாஸ் ஓபனிங் கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி பாடலுக்காக மும்தாஜை நினைத்து ஏப்பம் விட்டவர்கள் ஏராளம். நீ பாத்த...நான் பாக்கல... நீ பாத்த... நான் பாக்கல... என்று இரண்டு வாக்கியங்களை வைத்தே இன்றளவும் படத்தை அடையாளம் காணக்கூடிய படம் என்றால் அது குஷிதான்.

    கதாநாயகன்

    கதாநாயகன்

    வீட்டை விட்டு ஓடிப்போகும் எட்டு வயது சிறுவனை இருபத்தெட்டு வயது இளைஞனாக சயின்டிஸ்ட் மாற்றுவதால் நடக்கும் சம்பவங்கள் படத்தின் பெயருக்கு ஏற்றாற்போல் புதுசு. நியூ திரைப்படத்தில் பகலில் எட்டு வயது சிறுவனாகவும் இரவில் 28 வயது இளைஞனாகவும் எஸ்.ஜே.சூர்யா செய்யும் அட்டகாசங்கள் உச்சகட்டம்.

    நடிப்பு

    நடிப்பு

    முழு நடிகனாக வேண்டும் என்ற ஆசையை நியூ படத்தின் மூலம் பரிட்சயித்துப் பார்த்தார். அதன்பிறகு இயக்கிய அன்பே ஆருயிரே... படத்திலும் அவரே நடித்தார். பிறகு முழு நேர நடிகராக மாற்றிக் கொண்டு நடித்த கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்கள் சரியாக போகவில்லை.

    விமர்சனம்

    விமர்சனம்

    அர்த்த ராத்திரியில் கூட அடித்தொண்டையால் பேசுவது, ஒரேவிதமான டெம்ப்லேட் நடிப்பு என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக பல போராட்டங்களுக்கு பிறகு இயக்கி நடித்து இசையமைத்த இசை திரைப்படம் ஓரளவுக்கு பெயர் வாங்கித் தந்தது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்து வரவேற்பை பெற்றார். ஏ.ஆர்.ரகுமான் பலமுறை எஸ்.ஜே.சூர்யாவின் இசையறிவை பாராட்டியது வீண் போகவில்லை.இந்த பேச்சுக்களை முறிடிக்க அவர் எடுத்த முயற்சி வெற்றிபெறத் துவங்கியது இறைவி திரைப்படத்தில் எனச் சொல்லலாம். இயக்குனராகும் வாய்ப்பு தள்ளிப்போவதால் விரக்தியில் குடித்து குடித்து குடி நோயாளியாகவே வாழ்ந்தார் என பாராட்டுக்கள் குவிந்தன.

    மெர்சல்

    மெர்சல்

    மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தது ஜோக்கரின் ஹீத் லெட்ஜர் நடிப்பை ஒத்ததாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்தன. அதன்பிறகு டேனியல் ஆரோக்யராஜ் என கொடூர கார்ப்பரேட் டாக்டராக மெர்சலில் மெர்சல் செய்தார். இப்போது நம்பிக்கைக்குரிய நடிகராக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இருக்கு ஆனா இல்ல... என்று குழப்பிய எஸ்.ஜே.சூர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது கூடுதல் தகவல்!

    English summary
    Multi talented man SJ. Surya celebrates his 50th birthday today. He started his career as a waiter to seek movie chances.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X