National Cinema Day - தேசிய சினிமா தினம்.. மல்டிபிளக்ஸில் நாளை 99 ரூபாய்க்கு டிக்கெட்.. அசத்தல் விவரம் உள்ளே

சென்னை: National Cinema Day (தேசிய சினிமா தினம்) தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாளை சினிமா டிக்கெட்டுகள் 99 ரூபாய்க்கு விற்கப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்திருக்கிறது.

உலகளவில் சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இந்தியாவில் சினிமாவை எமோஷனலாக பார்ப்பவர்கள் உண்டு. அதனால்தான் உலகிலேயே அதிகம் சினிமா தயாராகும் நாடாக இந்தியா விளங்குகிறது. அதுமட்டுமின்றி சினிமா மீது இருக்கும் மோகத்தின் காரணமாக பலர் தங்களது வாழ்க்கையை சினிமாவுக்குள்ளேயே செலவு செய்ய தயாராகிறார்கள். அதில் பலர் வெல்கிறார்கள் பலர் காணாமல் போகிறார்கள். இருந்தாலும் மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.

multiplex association informed that cinema tickets will be sold at Rs 99 tomorrow on National Cinema Day

தமிழ்நாட்டில் சினிமா: இந்திய அளவில் இப்படி தமிழ்நாட்டில் ஒருபடி மேலே இருக்கும். சினிமாவையும், சினிமாக்காரர்களையும் தங்களின் ஒரு பகுதியாகவே பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதனால்தான் இதுவரை தமிழ்நாட்டை பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என நான்கு சினிமாக்காரர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். மேலும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். விஜய் அரசியலுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

விமர்சனம்: தமிழ்நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு சினிமா கொண்டாடப்படுகிறதோ அதே அளவு ஒரு தரப்பினரால் விமர்சனம் வைக்கவும் படுகிறது. அதற்கு காரணம் ரசிகர்கள் சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை என்பதுதான் அவர்களின் கூற்று. இருந்தாலும் பொழுது போக வேண்டுமென்றால் தியேட்டருக்கு போகலாம் என்ற நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது. ஓடிடி தளங்கள் வந்திருப்பது சினிமாக்களை மேற்கொண்டு நெருக்கமாக்கி இருக்கிறது.

தேசிய சினிமா தினம்: இந்நிலையில் தேசிய சினிமா தினம் நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா 99 ரூபாய்க்கு சினிமா டிக்கெட்டுக்களை விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கூடுதலாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

multiplex association informed that cinema tickets will be sold at Rs 99 tomorrow on National Cinema Day

எப்படி பதிவு செய்யலாம்: திரைப்படங்களுக்கான டிக்கெட்டுக்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி Book My Show, Paytm போன்ற செயலிகளின் மூலமாகவும் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு தொடர்புடைய இணையதளங்களிலும் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. கடந்த வருடமும் இதேபோன்ற முறையை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் செய்தபோது 80 சதவீத டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகின என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X